சினிமா

நாளை முதல் சன் டிவியில் காலத்தை வென்ற 5 முக்கிய சூப்பர் ஹிட் தொடர்கள்.! கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

Summary:

நாளை 01.03.2021முதல் சன் தொலைக்காட்சியில், காலத்தை வென்ற ௫ முக்கிய சூப்பர் ஹிட் தொடர்கள் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த தலைமுறையில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சீரியல்களுக்கு அடிமையாக உள்ளனர். அதற்க்கு முக்கிய காரணம் தொலைக்காட்சியில் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக  ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் முக்கிய தொடர்கள் தான்.

அதிலும் சன் தொலைக்காட்சி தொடர்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமான தொடர்கள் இருக்கின்றன. அதிலும் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகை ராதிகா நடித்த சித்தி சீரியலுக்கு இன்றளவும் ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். அதனால் தான் சன் டிவியில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான சித்தி, மர்மதேசம், மெட்டி ஒலி போன்ற தொடர்கள் மீண்டும் ஒளிபரப்பினர்.

இந்தநிலையில் வரும் திங்கள் முதல் சன் டிவியில் காலத்தை வென்ற முக்கிய 5 சூப்பர் ஹிட் மெகா தொடர்களை ஒளிபரப்பவுள்ளனர். அந்தவகையில் நாளை 01.03.2021முதல் சன் தொலைக்காட்சியில், உதிரிப்பூக்கள்  என்ற தொடர் நாளை காலை 9 மணிக்கும், ரம்யாகிருஷ்ணன், விஜயகுமார் நடித்த வம்சம் தொடர் 9:30 மணிக்கும், ராதிகா நடித்த செல்வி காலை 10 மணிக்கும், அதிகப்படியான எபிசோடுகளை கடந்த அத்திப்பூக்கள் தொடர் காலை 10:30 மணிக்கும், இளைஞர்களின் மனதில் இடம்பிடித்த நந்தினி  தொடர் காலை 11 மணிக்கும் ஒளிபரப்பவுள்ளனர். இதனால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருகின்றனர். 


Advertisement