#47YearsOfRajinism: பூங்கொத்து கொடுத்த லதா ரஜினிகாந்த்.. வெற்றிகொண்டாட்டத்தில் சூப்பர்ஸ்டார்.. துள்ளல் உற்சாகத்தில் ரசிகர்கள்.!

#47YearsOfRajinism: பூங்கொத்து கொடுத்த லதா ரஜினிகாந்த்.. வெற்றிகொண்டாட்டத்தில் சூப்பர்ஸ்டார்.. துள்ளல் உற்சாகத்தில் ரசிகர்கள்.!


47-years-of-rajinism-celebration-by-ladha-rajinikanth-t

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் முக்கியமான நடிகர் ரஜினிகாந்த். இவரை ரசிகர்கள் நடிகர் ரஜினிகாந்த் என்று அழைப்பதை விட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்றே அன்புடன் அழைப்பர். இவர் முதன்முதலாக இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கிய "அபூர்வ சகோதரர்கள்" என்ற படத்தின் அறிமுகமானார். 

rajinikanth

இந்த படத்தில் அவர் நடித்தது சிறிய ரோல் என்றாலும், முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அத்துடன் "16 வயதினிலே" திரைப்படத்தில் பரட்டையாக அறிமுகமான சிவாஜிராவ் ஹைக்வாட் சில வருடங்களிலேயே சூப்பர்ஸ்டாராக அங்கீகாரம் பெற்றார்

rajinikanth

அந்த அங்கீகாரத்தை பெறுவதற்கு முன் அவரது வாழ்வில் சந்தித்த துன்பங்கள் ஏராளமானது. திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசும்போது கூட, "தனது வாழ்க்கையின் கஷ்டத்தை தெரிவித்து, கஷ்டத்தை சந்தித்தால் தான் வாழ்க்கையில் முன்னேறமுடியும்" என ஆணித்தனமாக கூறினார். 

rajinikanth

இதன்பின் இவர் நடித்த ராகவேந்திரா, அண்ணாமலை, பாஷா, சிவாஜி, சந்திரமுகி, எந்திரன் போன்ற படங்கள் வித்தியாசமான கதைக்களத்தில் இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தனது திரைப்படத்தில் வாழ்க்கைக்கான பல பஞ்ச் டையலாக்குகளையும் வைத்து, தமிழகம் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

rajinikanth

இவரின் படம் ரிலீசானால் ஜப்பானிலிருந்து வந்து சென்னையில் படம் பார்த்துச்செல்லும் ரசிகர்களும் இருக்கின்றனர். திரையுலகின் உச்சநட்சத்திரமாக இன்று வரை திகழ்ந்துவரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் "Rajinism" 47 வருடங்களை நிறைவு செய்கிறது. இந்த நாளினை சிறப்பிக்கும்பொருட்டு அவரது வீட்டில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.