சினிமா

தல அஜித் நடித்து படு தோல்வியை தழுவிய படங்கள் எத்தனை தெரியுமா?

Summary:

21 flap movie act ajith

தல அஜித் தமிழ் சினிமாவில் கொண்டாடக்கூடிய ஒரு முன்னணி நடிகர். இவர் தமிழ் சினிமாவில் எந்த வித சிபாரிசும் இன்றி தனது சொந்த உழைப்பால் புகழின் உச்சிக்கு சென்றவர். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இவர் மிகவும் எளிமையை விரும்புவர். இவரின் பிறந்த நாள் மற்றும் படங்களை ரசிகர்கள் திருவிழா கோலம் போல கொண்டாடுவர். கடைசியாக தல அஜித் நடிப்பில் வெளியான நேர் கொண்ட பார்வை படம் பெண்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தற்போது ஏற்ப்பட்டிருக்கும் கொரோனா பாதிப்பு காரணமாக படப்பிடிப்புகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் நடித்து படு தோல்வியை தழுவிய படங்களை பற்றி பார்ப்போம்.

பாசமலர்கள், ராஜவின் பார்வையிலே, பவித்ரா, கல்லூரி வாசல், மைனர் மாப்பிள்ளை, நேசம், ராசி, உல்லாசம், பகைவன், ரெட்டை ஜடை வயசு, உயிரோடு உயிராக, உன்னைக்கொடு என்னை தருவேன், ரெட், ராஜா, ஜி, ஜனா, ஆழ்வார், ஏகன், அசல், பில்லா2, விவேகம்.


Advertisement