ஆத்தாடி! ஒன்றல்ல, இரண்டல்ல.. சத்யராஜின் தங்கை வீட்டை சுற்றி வளைத்த 15 காட்டுயானைகள்! வைரலாகும் புகைப்படங்கள்!!

ஆத்தாடி! ஒன்றல்ல, இரண்டல்ல.. சத்யராஜின் தங்கை வீட்டை சுற்றி வளைத்த 15 காட்டுயானைகள்! வைரலாகும் புகைப்படங்கள்!!


15-forest-elephant-came-to-sathyaraj-sister-house

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகேயுள்ள ஆனைக்கட்டி, பாலமலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றனர். அவை அவ்வப்போது உணவு மற்றும் குடிநீர் தேடி மலையடிவார குடியிருப்புக்குள் நுழைந்து விடும்.

அதிலும் தற்போது கோடைகாலம் என்பதால் காட்டுப்பகுதிக்குள் கடுமையான உணவு மற்றும் நீர் நிலைகள் வற்றி பெரும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காட்டுயானைகள் தண்ணீர் குடிப்பதற்காக கிராமத்திற்குள் வருகின்றனர். 
இவ்வாறு மூன்று குட்டிகள் உட்பட 15 காட்டு யானைகள் நேற்று பெரியநாயக்கன்பாளையம் பாலமலை அடிவாரத்தில் உள்ள நடிகர் சத்யராஜின் சகோதரிக்கு சொந்தமான பண்ணை  வீட்டில் நீரருந்த வந்துள்ளன. 

sathuyaraj sister அதனைக் கண்டதும் வீட்டில் பணிபுரிந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு மொட்டை மாடிக்கு ஓடியுள்ளனர். பின்னர் யானைகள் அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் விளையாடி நன்றாக தண்ணீர் குடித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து காட்டிற்குள் சென்றுவிட்டதாம். இந்த நிலையில் அத்தகைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.