உலகம் எதிர்பாராத அளவு உயரவிருக்கும் பெட்ரோல், டீசல் விலை - எச்சரிக்கை விடுக்கும் சவுதி இளவரசர்.

உலகம் எதிர்பாராத அளவு உயரவிருக்கும் பெட்ரோல், டீசல் விலை - எச்சரிக்கை விடுக்கும் சவுதி இளவரசர்.



petrol disel price

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை தற்போது, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.

இந்நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் முக்கிய இடத்தில் உள்ள சவுதி அரேபியாவின், அராம்கோ எண்ணெய் நிறுவனம் உலகின் மிக அதிக வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் ஆகும். அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய எண்ணெய் வயலில் மீது, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆளில்லா ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த விவகாரம் உலக அளவில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த தாக்குதலுக்கு முக்கிய  காரணம் ஈரான் நாடு தான் என கருதப்படுகிறது. 

petrol and disel

இதனை குறித்து சில தினங்களுக்கு முன்பு சி.பி.எஸ் ஊடகத்துக்கு பேட்டியளித்த சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான், 'உலக நாடுகள் ஒன்றிணைந்து ஈரானைத் தடுக்க முன்வரவில்லையென்றால் பெட்ரோல், டீசல் விலையை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துவிடும்.அந்த விலை உயர்வு நம் வாழ்நாளில் பார்த்திராத ஒன்றாக இருக்கும். ஈரானைத் தடுக்க உலக நாடுகள் முயற்சி செய்யவில்லையென்றால் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம். அது உலக நாடுகளை கடுமையாகப் பாதிக்கும் என கூறியுள்ளார்.