யாரும் அறியாத பகத்சிங் வாழ்க்கை வரலாறு பற்றிய சுவாரசிய தகவல்கள்!

யாரும் அறியாத பகத்சிங் வாழ்க்கை வரலாறு பற்றிய சுவாரசிய தகவல்கள்!



bhagat singh life history and early life

இந்திய சுதந்திர போராட்ட வீரர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் பகத்சிங். உண்மையான வீரனாக வாழ்ந்து, நாட்டிற்காகப் போராடி மடிந்து போனதால், இவர் ‘சாஹீது (மாவீரன்) பகத்சிங்’ என அழைக்கப்பட்டார். 

ஆங்கில ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய “இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு” அமைப்பின் தலைவர்களுள் இவரும் ஒருவர் ஆவர். சரி வாங்க இவரோட வாழ்க்கை வரலாறு பாக்கலாம் வாங்க.

bhagat singh

பிறப்பு

1907  ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27  ஆம் நாள் பஞ்சாப் மாநிலத்தில் லயால்பூர் மாவட்டத்திலுள்ள “பங்கா” என்ற கிராமத்தில், சர்தார் கிசன் சிங் என்பவருக்கும், வித்தியாவதிக்கும் இரண்டாவது மகனாக பிறந்தவர்தான் பகத்சிங். இவர் ஒரு சீக்கிய குடும்பத்தை சார்ந்தவர்.

ஆரம்ப வாழ்க்கை
பகத்சிங்கின் குடும்பமே ஒரு விடுதலை போராட்ட வீரர்களை கொண்டது. இதனாலேயே இளம் வயதில் இருந்தே விடுதலை போராட்டத்துக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். லாகூரில் உள்ள டி.ஏ.வி பள்ளியில் கல்வியைத் தொடங்கிய பகத்சிங் அவர்கள், லாலா லஜபதிராய் மற்றும் ராஸ் பிஹாரி போஸ் போன்ற அரசியல் தலைவர்களிடம் நட்புறவு கொண்டிருந்தார். 

bhagat singh

விடுதலைப் போரில் பகத்சிங்கின் பங்கு

‘அகிம்சை வழியில் சென்றால் சுதந்திரம் பெறமுடியாது, ஆயுதம் தாங்கினால் மட்டுமே சுதந்திரம் பெறமுடியும்!’ என முடிவுக்கு வந்தவர் பகத்சிங். இதனால் 1924 ஆம் ஆண்டு, சச்சீந்திரநாத் சன்யால் என்பவரால் தொடங்கப்பட்ட “இந்துஸ்தான் குடியரசுக் கழகம்” என்னும் அமைப்பில் இணைந்தார். பிறகு 1926ல் பகத்சிங், சுகதேவ், பவதிசரண் வேரா, எஷ்பால் போன்றோர் இணைந்து “நவ்ஜவான் பாரத் சபா” என்ற இளைஞர் அமைப்பை நிறுவினர்.

இறப்பு

சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில் வெடிகுண்டு வீசியது மற்றும் துண்டு பிரச்சாரம் போட்டு “இன்குலாப் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டு தானே சரணடைந்த பின்னர், காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் என்பவரின் இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியை சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகியோர் ஆங்கில அரசின் 24 வது அகவையில் 1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்கள்.