லைப் ஸ்டைல் சமூகம்

அந்த விசயத்திற்காக பணம் கொடுக்காததால் பெற்ற தாயை வெட்டிக்கொன்ற மகன்!

Summary:

man killed his mom for drinks

மது அருந்த பணம் கொடுக்க மறுத்த தாயை கம்பியால் அடித்து அரிவாளால் வெட்டியும் மகனே கொலை செய்துள்ள சம்பவம் நாகர்கோவில் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுவிற்கு அடிமையானவர்களால் ஏற்படும் கொடூர சம்பவம் நாளுக்கு நாள் அரங்கேறிக்கொண்டே இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அருகுவிளையை சேர்ந்த குமார் (37) என்பவர் 62 வயதான தனது தாய் தந்தை அவரது வீட்டில் கம்பியால் அடித்து அரிவாளால் வெட்டியும் கொலை செய்துள்ளார். 

குமார்

மதுவிற்கு அடிமையான குமாரின் மனைவி திருமணமான சில நாட்களிலேயே அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். தங்கம் தனது மூத்த மகனின் வீட்டின் அருகே தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார்.  இவர் கூலி வேலை செய்து தனது செலவுகளை தானே பார்த்து வந்துள்ளார். ஆனால் இவரிடம் இருக்கும் கொஞ்ச தொகையையும் இவரது மகன் குமார் மது அருந்துவதற்காக அடிக்கடி அவருடன் தகராறு செய்து பணத்தை பிடுங்கி சென்றுவிடுவார்.

இந்நிலையில் நேற்று மது அருந்துவதற்காக தாயிடம்  பணம் கேட்டுள்ளார் குமார். ஆனால் அவரது தாய் பணம் கொடுக்க மறுத்ததால், ஆத்திரம் அடைந்த குமார் அருகில் இருந்த கம்பியால் அவரது தலையில் தாக்கியுள்ளார். இதனால் மயங்கி கீழே விழுந்த தாய் தங்கத்தை அங்கு இருந்த அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளார். 

தங்கம்

பின்னர் என செய்வதென்று அறியாமல் முழித்த குமார் அருகில் உள்ள சகோதரன் வீட்டிற்கு சென்று தாய் கீழே மயங்கி விழுந்துவிட்டதாக கூறி நாடகமாடியுள்ளார். அவர்கள் வந்து பார்த்தபோது தங்கம் ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தங்கத்தை பரிசோதித்த மருத்துவர்கள் தங்கம் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர். 

இதனை தொடர்ந்து தங்கத்தின் வீட்டிற்குள் சென்ற உறவினர்கள் வீட்டில் இரத்த கரையுடன் அரிவாள் இருப்பதைப் பார்த்து சந்தேகமடைந்தனர். இது தொடர்பாக உறவினர்கள் வடசேரி காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி, தாயைக் கொன்ற மகன் குமாரை கைது செய்தனர்.


Advertisement