சமூகம்

மனைவியுடன் ஜாலியாக இருந்துவிட்டு திடீரென கொலை செய்ய முயன்ற கணவர்! சென்னையில் பரபரப்பு

Summary:

husband tried killing wife in chennai

சென்னை திருவான்மியூரில் மனைவியுடன் ஜாலியாக பொழுதை கழித்த கணவர் திடீரென மர்ம நபரை கொண்டு மனைவியை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆபத்தான நிலையில் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்ணகி நகரைச் சேர்ந்த ராஜேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன் சிறையிலிருந்து ராஜேஷ் வெளியில் வந்தார். அவர் தனது மனைவி சரண்யாவை அழைத்துக்கொண்டு திருவான்மியூர் கடற்கரை பகுதிக்கு நேற்று சென்றுள்ளார்.

வெகுநேரம் கடற்கரையில் ஜாலியாக பொழுதை கழித்த இருவரும் அந்த பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த மர்ம நபர்கள் சரண்யாவை அரிவாளால் வெட்டினார். ராஜேஷ் அவர்களை தடுக்காமல் மர்ம நபர்களுடன் சேர்ந்து அவரும் மனைவியை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சரண்யா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

பிறகு ராஜேஷ் மற்றும் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காவல் துறையினர், சரண்யாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ராஜேஷ் தலைமறைவாகிவிட்டார். இதனால் ராஜேஷ் உட்பட மர்மநபர்களை திருவான்மியூர் காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். இதற்கான காரணம் என்னவென்று விசாரணை செய்கையில் காவல்துறையினருக்கு பின்வரும் தகவல் கிடைத்துள்ளது:

ராஜேஷின் அம்மா, சகோதரியை சில மாதங்களுக்கு முன் சரண்யா பிளேடால் வெட்டியதாகச் சொல்லப்படுகிறது. அதற்கு பழிவாங்கத்தான் சரண்யாவை ராஜேஷ் தலைமையிலான கும்பல் வெட்டியிருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். 


Advertisement