"வீடியோவை டெலிட் பண்ணு.. காசு தரேன்." insta பிரபலத்திடம் நடிகை நயன்தாரா பேரம்.!
பெண்கள் விடுதி உரிமையாளர் மர்ம மரணம்; கிணற்றில் சடலமாக மீட்பு
கடந்த சில நாட்களுக்கு முன் கோவையில் விடுதி மாணவிகளை விடுதி உரிமையாளர் தன் பிறந்த நாளன்று படுக்கைக்கு அழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் விடுதி உரிமையாளர் ஜெகநாதன், திருநெல்வேலி ஆலங்குளம் அருகே உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன்(45), பாலரங்கநாதபுரத்தில் ‘தர்சனா’ என்ற பெயரில் மகளிர் விடுதி நடத்தி வந்தார். அதில் கல்லூரி மாணவியர், ஐடி நிறுவன பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர்.
இந்த விடுதியில் கோவை தண்ணீர்பந்தல் ரோட்டை சேர்ந்த புனிதா (32) என்பவர் வார்டனாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் விடுதி உரிமையாளரின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடப்பதாகவும், அங்கு சென்று உணவு சாப்பிட்டு விட்டு வரலாம் என்றும் விடுதியில் தங்கி இருந்த 5 மாணவிகளிடம் வார்டன் புனிதா கூறி உள்ளார். அதை நம்பிய அந்த மாணவிகள் புனிதாவுடன் அந்த ஓட்டலுக்கு சென்றனர்.
அப்போது மாணவிகளை மதுஅருந்த வற்புறுத்தியுள்ளார். மேலும் விடுதி உரிமையாளர் ஜெகந்நாதனுடன் வாட்ஸ் ஆப் வீடியோவில் பேசவும் வற்புறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர்களும், உறவினர்களும் விடுதியை முற்றுகையிட்டனர்.
இதனால் அச்சமடைந்த விடுதி உரிமையாளர் ஜெகந்நாதன் மற்றும் காப்பாளர் புனிதா ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து புகாரின் பேரில் இருவரின் பேரிலும் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் பீளமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் விடுதி உரிமையாளர் ஜெகந்நாதன் ஆலங்குளத்தில் உள்ள ஒரு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அவரது சடலத்தை மீட்ட போலீஸார் அதை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தற்கொலையா அல்லது கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.