தமிழகம் லைப் ஸ்டைல்

தனது பிறந்தநாள் பரிசாக 2 அரசுப் பள்ளிகளை சீரமைத்துள்ள பிரபல தமிழ் நடிகர். குவிந்து வரும் பாராட்டுகள்.!

Summary:

actor rakava larense birthday gift

தமிழ் சினிமாவின் முன்னணி டான்ஸ் மாஸ்டரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் தனது பிறந்தநாளை முன்னிட்டு 2 அரசு பள்ளிகளை தத்தெடுத்து சீரமைத்து கொடுத்துள்ளார். அதனால் அனைவரும் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இன்றைய சூழலில் தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு பள்ளிகளிலும் போதிய வசதிகள் இன்றி மிகவும் சிரமமான நிலையில் உள்ளது. அரசு எவ்வளவு நிதி ஒதுக்கினாலும் தரம் உயர்த்த மிகவும் கடினமாகவே உள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் அரசு பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் தற்போது பலர் நல்ல நிலையில் உள்ளார்கள்.

Image result for raghava lawrence

இது என் பள்ளி, நான் படித்த பள்ளி என்ற எண்ணம் கொண்டவர்களின் துணை, அனைத்து அரசுப்பள்ளிகளையும் மெருகேற்றும். பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் தீட்டுதல், கழிப்பறை வசதி, இணைய வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் முன்வர வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோளை ஏற்று தனது பிறந்தநாளான நேற்று( அக்டோபர் 29 )சென்னை பாடியில் உள்ள அரசு பள்ளி ஒன்றையும் செஞ்சி அருகில் உள்ள பள்ளி ஒன்றையும் தத்தெடுத்து பள்ளி கட்டிடத்தை சீரமைத்து வர்ணம் பூசி கொடுத்துள்ளார். இதனால் அந்த இரண்டு பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மிளிர்கின்றன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


 


Advertisement