உலகம்

விளையாட சென்றுவிட்டு மான் குட்டியுடன் திரும்பி வந்த சிறுவன்.! ஆச்சர்ய சம்பவம்.!

Summary:

அமெரிக்காவில் விளையாடச் சென்ற சிறுவன் ஒருவன், தன்னுடன் ஒரு குட்டி மானை அழைத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமெரிக்காவில் பிரவுன் என்பவர் தனது குடும்பத்தினருடன் விடுமுறையை செலவிட வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ஒரு தேசிய பூங்காவின் அருகில் ஒரு ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். அப்போது பிரவுனின் 4 வயது மகனான டொமினிக் என்ற சிறுவன் தனது நாய்க்குட்டியை அழைத்துக்கொண்டு விளையாடச் சென்றுள்ளான்.

இதனையடுத்து அந்த சிறுவன் விளையாடிவிட்டு ரிசார்டிக்கு திரும்புகையில் குட்டி மான் ஒன்றையும் உடன் அழைத்து வந்துள்ளான். இதனைப்பார்த்த அனைவரும் சிறுவனுடன் மான் குட்டி வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மான்குட்டியுடன் தனது மகன் வீட்டிற்கு வருவதை பார்த்த சிறுவனின் தாய், உடனடியாக மானுடன், தன் மகன் நின்றதை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த சிறுவன் பூங்காவிற்கு வெளியே வந்த மான் குட்டியுடன் பாசமாக பழகியதால் சிறுவனுடனே மான்குட்டியும் வீடு திரும்பியுள்ளதாக இணையவாசிகள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement