மகிழ்ச்சி செய்தி! தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல்.. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நீண்ட காலமாக எதிர்பார்த்த ஈட்டிய விடுப்பு பணமாக்கல் (Earned Leave Encashment) திட்டம் 2025 அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது என அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். தற்போது, அந்த திட்டம் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஊழியர்கள் பயன்படுத்தாத ஈட்டிய விடுப்புகளை பணமாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பே இந்த Encashment சலுகை. இது, 2020–2023 காலக்கட்டத்தில் கொரோனா நிதிசுமை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. முதலில் 2026 ஏப்ரல் முதல் என திட்டமிட்டிருந்தபோதும், தற்போது முன்கூட்டியே 2025 அக்டோபரில் இந்த திட்டம் அமலாகும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஆண்டிற்கு அதிகபட்சம் 15 நாட்கள் வரை விடுப்புகளை பணமாக்கிக் கொள்ளலாம்.
இதையும் படிங்க: திருநெல்வேலி சாந்தி ஸ்வீட்ஸ் கடை அல்வா பொட்டலத்தில் தேள்! கடையில் அதிரடி ஆய்வு! திருநெல்வேலியில் பரபரப்பு..
இந்த திட்டம் செயல்பாட்டிற்கு ரூ.3,561 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரடி நிதி நலன்களைப் பெற வாய்ப்பு உள்ளது. பணமாக்கல், சில நிபந்தனைகள் மற்றும் வரம்புகளுக்கு உட்பட்டது. இது, ஊழியர்களின் சுகாதார தேவைகள் அல்லது அவசர நிதிச்சுமைக்கு உதவும்.
துறை வாரியாக விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் நலனை முன்னிலைப்படுத்தும் இந்த நடவடிக்கை, தமிழக அரசின் வலுவான செயல் என்றே பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கடற்கரையில் ஒதுங்கிய 150 கிலோ எடையுள்ள மிகப்பெரிய டால்பின்! அதன் நிலைமையை பார்த்து மக்கள் அதிர்ச்சி..