உலகம்

எந்த கணவனுக்கும் இப்படி ஒரு கொடுமை நடக்க கூடாது!! கணவரை கொன்று மர்ம உறுப்பை எண்ணெய்யில் பொறித்த மனைவி!

Summary:

கணவனை கொலை செய்து, அவரது அந்தரங்க உறுப்பை மனைவி எண்ணெய்யில் பொறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற

கணவனை கொலை செய்து, அவரது அந்தரங்க உறுப்பை மனைவி எண்ணெய்யில் பொறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் உள்ள Sao Goncalo என்ற நகரைச் சேர்ந்தவர்கள் ஆண்ட்ரே மற்றும் கிறிஸ்டினா மச்சாடோ (வயது 33) தம்பதி. இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் முடிந்தநிலையில் தற்போது அவர்களுக்கு 8 வயதில் மகனும், 5 வயதில் மகளும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. சில வருடங்களுக்கு முன்னர்கூட இருவரும் பிரிந்து பின் ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடத்திவந்துள்ளனர். இந்நிலையில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு வந்ததை அடுத்து இருவரும் நிரந்தரமாக பிரிவது குறித்து முடிவு செய்துள்ளனர்.

இதில் ஏற்பட்ட தகராறில்தான் மனைவி கிறிஸ்டினா, தன்னுடைய கணவர் ஆண்ட்ரேவை கொலை செய்திருக்கிறார். ஆண்ட்ரே கொலை செய்யப்பட்ட தகவல் குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

அங்கு வந்த போலீசாருக்கு மேலும் பல அதிர்ச்சிகள் காத்திருந்தது. ஆம், கணவனை கொலை செய்தது மட்டுமில்லாமல் அவரது உடலை சிதைத்து, அவரது அந்தரங்க உறுப்பை கத்தியால் வெட்டி எண்ணெய் ஊற்றி பொறித்துள்ளார் அவரது மனைவி.

தன்னுடைய கணவர் அடிக்கடி கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும், சுயபாதுகாப்புக்காக அவரை கொலை செய்ததாகவும் மனைவி காவல்துறையினரிடம் கூறியுள்ளார். அதுவே காரணமாக இருந்தாலும், அந்தரங்க உறுப்பை ஏன் எண்ணெயில் பொறித்தார் என்ற சந்தேகம் போலீசாருக்கு அதிகமானதால், ஒருவேளை அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்க கூடும் என மருத்துவர்களின் உதவியை நாடியுள்ளனர். இந்த சம்பவமானது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement