உலகில் அதிக குழந்தைகளை பெற்ற பெண் யார்? எத்தனை குழந்தைகள்? எத்தனை பிரசவம் தெரியுமா?

உலகில் அதிக குழந்தைகளை பெற்ற பெண் யார்? எத்தனை குழந்தைகள்? எத்தனை பிரசவம் தெரியுமா?


who-have-more-babies-in-the-world

வாழ்க்கைமுறை மாற்றம், உணவு பழக்கவழக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் இன்று ஓன்று அல்லது இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்வதே மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆனால், நமது முன்னோர்கள் 5 முதல் 10 குழந்தைகள் என சுக பிரசவத்தில் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்தார்.

இந்நிலையில் இந்த உலகில் இதுவரை யார் அதிக குழந்தைகள் பெற்றது என்ற சுவாரசியமான தகவல் கிடைத்துள்ளது. ரஷ்யா நாட்டை சேர்ந்த Feodor Vassilyev என்பவரின் முதல் மனைவிக்கு 69 குழந்தைகள் பிறந்துள்ளது. 1725 மற்றும் 1765 க்கு இடைப்பட்ட காலங்களில் இந்த பிரசவம் நடந்துள்ளது.

கிட்டத்தட்ட 27 பிரசவத்தில் 16 முறை இரட்டை குழந்தைகளும், 7 முறை மூன்று குழந்தைகளாகவும், 4 கு முறை நான்கு குழந்தைகளாகவும் மொத்தம் 27 முறை நடந்த பிரசவத்தில் மொத்தம் 69 குழந்தைகள் பிறந்துள்ளது.

இதில் ஒரு இரட்டை குழந்தைகள் உயிர் இழந்த நிலையில் மீதம் 67 குழந்தைகள் நலமுடன் இருந்துள்ளனர். இதில் மேலும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் Feodor Vassilyev முதல் மனைவிக்குத்தான் இந்த 69 குழந்தைகளும் பிறந்துள்ளது, Feodor Vassilyev வின் இரண்டாவது மனைவி 18 குழந்தைகள் பிறந்துள்ளது.

Feodor Vassilyev  என்ற நபருக்கு மொத்தம் 87 குழந்தைகள் பிறந்த நிலையில் அவர்களில் 82 பேர் நலமுடன் வாழ்ந்திருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.