அதிர்ச்சி வீடியோ! திடீரென ரத்த சிவப்பாய் மாறிய வானம்! உலக அழிவின் ஆரம்பமா? ஆஸ்திரேலியா மக்களை வியக்க வைத்த விசித்திரமான வானம்!!!
மேற்கு ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நிகழ்ந்த வானியல் மாற்றம் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. திடீரென வானம் முழுவதும் சிவப்பு நிறத்தில் மாறிய இந்த சம்பவம், இயற்கையின் வினோத சக்தியை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது. இந்த நிகழ்வு குறித்து பலரும் சமூக வலைதளங்களில் ஆர்வத்துடன் விவாதித்து வருகின்றனர்.
மார்ச் 27 அன்று மேற்கு ஆஸ்திரேலியாவின் ஷார்க் பே மற்றும் பில்பாரா பகுதிகளில் வானம் ரத்தச் சிவப்பாக மாறிய காட்சிகள் பதிவாகின. இந்த மாற்றம் அப்பகுதியை முழுவதும் ஒரு திகிலூட்டும் சிவப்பு ஒளியில் மூழ்கடித்தது. இதைப் பார்த்த மக்கள், இது இயற்கை மாற்றமா அல்லது அமானுஷ்ய நிகழ்வா என சந்தேகத்தில் ஆழ்ந்தனர்.
இதையும் படிங்க: இப்படி கூட நடக்குமா! உயிரோடு உள்ள பாம்பை முழுசாக விழுங்கிய மற்றொரு பாம்பு! திகில் வீடியோ காட்சி....
சூறாவளி காரணமா?
இந்த வினோத நிகழ்வுக்குப் பின்னால் அறிவியல் காரணம் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ‘சைக்க்ளோன் நரேல்’ (Cyclone Narelle) எனப்படும் சக்திவாய்ந்த சூறாவளி ஆஸ்திரேலியக் கடற்கரையை நோக்கி நகர்ந்தது. மணிக்கு 125 கி.மீ வேகத்தில் வீசிய இந்த புயல், வறண்ட பகுதிகளில் இருந்த தூசிகளை வளிமண்டலத்திற்கு உயர்த்தியது.
ஒளிச் சிதறல் விளைவு
இந்த தூசிகளில் அதிக அளவில் இரும்பு ஆக்சைடு இருந்தது. ஒளிச் சிதறல் (Light Scattering) என்ற இயற்பியல் விதிப்படி, சூரிய ஒளி தூசு நிறைந்த வளிமண்டலத்தில் செல்லும்போது குறைந்த அலைநீள நிறங்கள் (நீலம், பச்சை) சிதறடிக்கப்படுகின்றன. ஆனால், நீண்ட அலைநீளமான சிவப்பு நிறம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
இதனால், இரும்பு துகள்கள் இயற்கை வடிகட்டியாக செயல்பட்டு, வானம் முழுவதும் சிவப்பு வானம் போன்ற தோற்றத்தை உருவாக்கியது. இந்த காட்சி, செவ்வாய் கிரகத்தில் இருப்பதைப் போன்ற அனுபவத்தை வழங்கியதாக பலர் தெரிவித்தனர்.
விஞ்ஞானிகள் கூறுவதாவது, இத்தகைய நிகழ்வுகள் அரிதாக இருந்தாலும், கடும் காற்றுடன் கூடிய சூறாவளி தாக்கும்போது இது முற்றிலும் இயற்கையானதாகும். சைக்க்ளோன் நரேல் போன்ற வலுவான காலநிலை மாற்றங்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற காட்சிகளை மீண்டும் உருவாக்கும் வாய்ப்பும் உள்ளதாக அவர்கள் எச்சரிக்கின்றனர்.
இயற்கையின் அசாதாரண நிகழ்வுகள் மனிதர்களுக்கு வியப்பையும் விழிப்புணர்வையும் தருகின்றன. காலநிலை மாற்றங்களைப் புரிந்துகொள்வதும், அவற்றின் விளைவுகளை முன்னறிவிப்பதும் இன்றைய உலகில் மிகவும் அவசியமாகிறது.
NO, that’s not a filter! ☁️🔴 The sky turned an eerie shade of red in Western Australia as dust filled the air ahead of Tropical Cyclone Narelle. pic.twitter.com/dCQ2hjFluI
— AccuWeather (@accuweather) March 28, 2026