நீந்தும் மீன் தெரியும்.. ! ஆனால் தண்ணீரில் நடந்து செல்லும் அதிசய மீன்..! ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்..!

நீந்தும் மீன் தெரியும்.. ! ஆனால் தண்ணீரில் நடந்து செல்லும் அதிசய மீன்..! ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்..!



Walking Shark New Species Discovered In Indonesia

இந்த உலகில் நமது கண்னுக்கு தெரியாத அறிவுக்கு எட்டாத பல கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகிறது. அதிலும் குறிப்பிக்க, கடலுக்கு அடியில் பல கோடி கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன.

இந்நிலையில் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கடந்த 12 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசிய கடல் பகுதியில் வித்தியாசமான உயிரினங்கள் ஏதும் வாழ்கின்றனவா என ஆராய்ச்சி நடத்தினர். இந்த ஆராய்ச்சியில் நடந்து செல்லும் மீன் ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனனர்.

Mystery

பொதுவாக மீன்கள் தண்ணீரில் நீந்தி செல்லக்கூடியவை, ஆனால் இந்த அதிசய மீனானது தனது பக்கவாட்டு துடுப்புகளை பயன்படுத்தி, அந்த துடுப்புகளை தரையில் ஊன்றி அதன் மூலம் நடந்து வருகிறது. புள்ளி சுறா இனத்தை சேர்த்த இந்த மீனின் மற்ற குடும்பங்கள் குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.