இரட்டை நிலநடுக்கம்... இரண்டாக பிளந்த பூமி! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.... வெனிசுலாவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்..! பதறவைக்கும் வீடியோக்கள்..!!!



venezuela-twin-earthquakes-cause-widespread-destruction

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் 40 நொடிகள் இடைவெளியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் காரணமாக தலைநகர் கராகஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டடங்கள் இடிந்து விழுந்து, மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

கராகஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பாதிப்பு

தகவலின்படி, தலைநகர் கராகஸ் மற்றும் வடக்கு வெனிசுலாவின் கடலோர நகரங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பல அடுக்குமாடி குடியிருப்புகள், அரசு மற்றும் பொதுக் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. விமான நிலைய சேவைகளும் பாதிக்கப்பட்டதால், போக்குவரத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பெரும் அதிர்ச்சி! தெலுங்கானா மாநில அரசு பேருந்து விபத்தில் பலி எண்ணிக்க 24 ஆக உயர்வு! சாலையில் சிதறி கிடக்கும் உடல்கள்....!!

மீட்புப் பணிகள் தீவிரம்; பலி எண்ணிக்கை உயரக்கூடும்

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS), இந்த பேரிடரால் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கக்கூடும் என எச்சரித்துள்ளது. எனினும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இடிபாடுகளுக்குள் இன்னும் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. சாலைகளில் ஏற்பட்ட பிளவுகள் மற்றும் சேதம் காரணமாக மீட்புக் குழுவினர் பல பகுதிகளை அடைவதில் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அவசரநிலை பிரகடனம்

நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு வெனிசுலா அரசு நாடு முழுவதும் அவசரநிலையை அறிவித்துள்ளது. USGS உள்ளிட்ட அமைப்புகளின் கண்காணிப்புடன் ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் இணைந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். வீடுகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக முகாம்கள் மற்றும் பாதுகாப்பான திறந்தவெளிப் பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

இதையும் படிங்க: கல் நெச்சையும் கரைய வைக்கும் காட்சி.... ஒரே லைப் ஜாக்கெட்டில் கட்டியணைத்தபடி அம்மா -மகன்! பலத்த காற்றால் படகு விபத்தில் நடந்த கொடூரம்!!!