உலகம் மருத்துவம் லைப் ஸ்டைல்

கொரோனாவே பரவால்ல! மனித மூளையை உண்ணும் கொடிய அமீபா! கடும் பீதியில் மக்கள்.

Summary:

US texas brain eating amoeba found in drinking water

கொரோனா பாதிப்புக்கு நடுவே அமெரிக்காவில் மூளையை உண்ணும் அமீபா பாதிப்பு மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா தாக்கம் முடிவதற்குள் அமெரிக்காவில் மனித மூளையை உண்ணும் அமீபா பாதிப்பு மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெக்சாஸ் என்னும் பகுதியில் குழாய் நீரை குடித்த குழந்தை ஒன்று அமீபா நோய் தொற்றினால் உயிரிழந்தது. குழந்தை உயிரிழந்தது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் குழந்தை குட்டித்த குடிநீரில் மூளையை உண்ணும் நுண்ணுயிரியான அமீபா இருந்தது கண்டறியப்பட்டது.

குறிப்பிட்ட அமீபாவானது மனிதனின் மூக்கு வழியாக மூளையை அடைந்து, மூளையை உணவாக உட்கொள்கிறது. மேலும் மூளையில் நோய்த் தொற்றுக்களை ஏற்படுத்தி உடலின் அனைத்து பகுதிகளுக்கும் செல்கிறது.

இதனை அடுத்து டெக்சாஸ் பகுதியில் விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை மக்கள் குடிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து நிபுணர்கள் கூறும் போது, இந்த அமீபா பாதிப்பு புதியது அல்ல என்றும், கடந்த 2011 மற்றும் 2013ம் ஆண்டுகளில் தெற்கு லூசியானாவில் இதுபோன்ற அமீபா தொற்று ஏற்பட்டு உயிரிழப்புகள் நடந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுபோன்ற மூளையை உண்ணும் அமீபா ஏரி, ஆறுகள் மற்றும் நீரோடைகளில் காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


Advertisement