இந்தியாவுக்கு எதிராக மிகப்பெரிய முடிவு எடுத்த அமெரிக்கா.. கலக்கத்தில் நிறுவனங்கள்.. 200% வரி..!
இந்தியாவில் உற்பத்தி செய்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துக்கு 200% வரி விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3 ல் 1 க்கு இந்தியாவின் பங்கு:
அமெரிக்காவில் மலிவுவிலை ஜெனரிக் மருந்துகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலையில், இந்தியா அந்த இடத்தில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. அதாவது, உலகின் மிகப்பெரிய மருந்து சந்தையாக கருதப்படும் அமெரிக்காவுக்கு இந்தியா முதன்மையான & முக்கியத்துவமான மருந்து விநியோகிஸ்தராக இருந்து வருகிறது. அமெரிக்க மக்களால் பயன்படுத்தப்படும் 3 ல் 1 மாத்திரை இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவது ஆகும்.
வருவாய் & இறக்குமதி:
அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் ஜெனரிக் மருந்து தேவையில், சுமார் 47% வரை இந்தியா பூர்த்தி செய்கிறது. இந்தியாவில் மருந்து உற்பத்தி செலவு அமெரிக்காவை விட 70% குறைவு என்பதால், இது அமெரிக்காவுக்கு லாபமாக இருக்கிறது. இந்திய மருந்து நிறுவனங்களும் தங்களின் மொத்த வருவாயில் 40% ஐ அமெரிக்காவில் இருந்து பெறுகின்றன.

200% வரி:
இதனிடையே, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஜெனரிக் மருந்துகளுக்கு அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் 200% வரி விதித்து உத்தரவிட்டு இருக்கிறார். உள்நாட்டில் மருந்து உற்பத்தியை ஊக்குவிக்கவும், பிற நாடுகளில் இருந்து மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதை குறைக்கவும் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி நடைமுறை ஆகஸ்ட் 01 ம் தேதி தொடங்கி, 2028 வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2 ஆண்டுகளுக்கு பூஜ்ய வரி விகிதத்தை நடைமுறைப்படுத்தி, 2029 ல் 200 % வரி வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நிறுவனங்களுக்கு ஆப்பு:
அமெரிக்காவின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவிலான மருந்து உற்பத்தியாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்திய நிறுவனங்களுக்கு இது பேரிடியாகும். இவ்வாறான வரிவிதிப்பு காரணமாக அமெரிக்காவில் இருக்கும் ரத்த அழுத்தம், நீரிழிவு, புற்றுநோய்க்கான மருந்துகளின் விலை உயரலாம் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க: சிலிண்டர் விலை இன்று... மாதத்தின் முதல் தேதியில் வந்தது முக்கிய செய்தி. இறங்கிய இடி..!