உலகம் லைப் ஸ்டைல்

பிரிந்துவிடவே கூடாது என கைகளில் விலங்கிட்டுக்கொண்ட காதல் ஜோடி!! 123 நாட்கள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி..

Summary:

தாங்கள் பிரியவே  கூடாது என்பதற்காக கைகளை இணைத்து விலங்கு போட்ட காதல் ஜோடி கடைசியில் ப

தாங்கள் பிரியவே  கூடாது என்பதற்காக கைகளை இணைத்து விலங்கு போட்ட காதல் ஜோடி கடைசியில் பிரிவை சந்தித்த தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

உக்ரேனின் கார்கிவ் நகரைச் சேர்ந்தவர் அலெக்ஸாண்டர் குட்லே. வாகன விற்பனையாளராக தொழில் புரிந்தவரும் இவரும், ஒப்பனைக் கலைஞரான விக்டோரியா புஸ்டோவிடா என்ற இளம் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்துவந்தனர்.

இந்நிலையில்தான் இந்த காதல் ஜோடி ஒரு வினோதமான முடிவுக்கு வந்தது. அதாவது, உலகில் உள்ள மற்ற காதலர்கள் போல் இல்லாமல், நாம் இருவரும் எப்போதும் சேர்ந்தே இருக்கவேண்டும் எனவும், சரித்திரத்தில் இடம் பிடிக்கவேண்டும் என்றும் ஒரு முடிவுக்கு வந்தனர்.

அதன்படி, கடந்த காதலர் தினத்தன்று காதலர்கள் இருவரும் தங்கள் கைகளை ஒன்றாக சேர்த்து விலங்கிட்டுக்கொண்டனர். அலெக்ஸாண்டரின் வலக்கை மற்றும் விக்டோரியாவின் இடக்கையை இணைத்து இந்த விலங்கு போடப்பட்டநிலையில், 123 நாட்கள் இருவரும் ஒன்றாகவே இருந்துள்ளனர். ஒருவரின் வேலையை பார்க்க மற்றொருவர் உதவுவது இப்படி இவர்களது காதல் கதை நீட்டுக்கொண்டிருந்தநிலையில். 123 வது நாளில் இதற்கு ஒரு முடிவு வந்தது.

ஆம், இதற்கு மேல் தங்களால் இப்படி ஒரு வாழ்க்கையை வாழ முடியாது எனவும், இருவரும் பிரிந்துவிடலாம் எனவும் காதல் ஜோடி முடிவு செய்துள்ளது. 24 மணி நேரமும் கூடவே இருந்ததால், அலெக்ஸாண்டரின் கவனம் தன் மீது இல்லை என்றும், ஒருமுறை கூட ஐ மிஸ் யூ என அவர் கூறவில்லை எனவும் பிரிவுக்கான காரணம் குறித்து காதலி விக்டோரியா கூறியுள்ளார்.

அதேபோல், தாங்கள் ஒரே மாதிரியான விருப்பு, வெறுப்பு கொண்டவர்கள் இல்லை என்றும், தங்களுக்குள் ஒரே அலைவரிசை இல்லை என்றும் பிரிவுக்கான காரணம் குறித்து அலெக்ஸாண்டர் கூறியுள்ளார்.

பிரிந்துவிடாமல் இருக்க வித்தியாசமாக யோசித்த காதல்ஜோடிக்கு, கடைசியில் அதுவே பிரிவுக்கான காரணத்தை உருவாக்கியது தற்போது உலகம் முழுவதும் பேசப்பட்டுவருகிறது.


Advertisement