ஒரே பிரசவத்தில் பிறந்த சகோதரிகள்! 50 வருஷமா மறைந்து இருந்த ரகசியம்...DNA டெஸ்ட்டால் வெளிவந்த உண்மை! அம்பலமான உண்மையால் நடந்த அதிர்ச்சி! பகீர் சம்பவம்...!!!



uk-twin-sisters-dna-medical-rare-case

இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் நகரைச் சேர்ந்த மிஷேல் மற்றும் லவினியா ஆஸ்போர்ன் சகோதரிகளின் வாழ்க்கையில் டிஎன்ஏ பரிசோதனை எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக இரட்டையர்கள் என்று நம்பி வாழ்ந்த இவர்களுக்கு, அவர்கள் ஒரே தாய்க்கும் வெவ்வேறு தந்தைகளுக்கும் பிறந்தவர்கள் என்ற உண்மை தற்போது தெரியவந்துள்ளது.

உலக மருத்துவ வரலாற்றில் மிகவும் அரிதாக பதிவாகும் இந்த நிலை, இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட முதல் சம்பவமாக கருதப்படுகிறது. மருத்துவ உலகில் இது ஹெட்டெரோபேட்டர்னல் சூப்பர்ஃபெகுண்டேஷன் என்று அழைக்கப்படுகிறது.

இதையும் படிங்க: பல இளம் நடிகைகளுடன் உடலுறவு.... பிரபல நடிகரின் காம லீலைகளை அம்பலப்படுத்திய பெண்! குடும்பத்திற்குள் தெரிந்த ரகசியம்... அடுத்து எடுத்த அதிரடி முடிவு!!!

சந்தேகத்தில் தொடங்கிய டிஎன்ஏ பரிசோதனை

தகவலின்படி, தங்களை வளர்த்த ஜேம்ஸ் என்பவரே தந்தை என்று இரு சகோதரிகளும் நம்பி வந்தனர். ஆனால், தனது முக அமைப்பிலும் குடும்ப தோற்றத்திலும் இருந்த வேறுபாடுகள் குறித்து மிஷேலுக்கு நீண்ட நாட்களாக சந்தேகம் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில், மிஷேலின் உயிரியல் தந்தை அலெக்ஸ் என்றும், லவினியாவின் தந்தை ஆர்தர் என்றும் உறுதி செய்யப்பட்டது. இந்த தகவல் வெளியானதும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

அரிய மருத்துவ நிகழ்வு எப்படி நடக்கிறது?

மருத்துவ நிபுணர்கள் கூறுவதன்படி, ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியில் இரண்டு கருமுட்டைகள் வெளிவரும் நேரத்தில், வெவ்வேறு ஆண்களின் விந்தணுக்கள் அவற்றை கருவுறச் செய்தால் இப்படியான நிலை ஏற்படும். உலகளவில் இதுவரை வெறும் 24 முறை மட்டுமே இந்த நிகழ்வு பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உண்மை தெரிந்த நாளே தாயார் உயிரிழப்பு

சகோதரிகளின் பிறப்பு ரகசியம் வெளிவந்த அதே நாளில் அவர்களின் தாயார் இயற்கை எய்தியதாக கூறப்படுகிறது. இதனால் பல கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் போயுள்ளது.

இருப்பினும், அரை நூற்றாண்டுக்குப் பிறகு தங்களின் உண்மையான வேர்களை அறிந்ததில் இருவரும் மனநிம்மதி அடைந்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உயிரியல் ரீதியாக வெவ்வேறு தந்தைகளுக்குப் பிறந்திருந்தாலும், அவர்களின் பாசமும் உறவும் இன்றும் மாறாமல் தொடர்கிறது.

 

இதையும் படிங்க: உடலில் புழுக்கள் தோன்றியதால் பிணத்தை எரித்தேன் .... 4 நாட்களுக்கு பிறகு வீட்டிற்குள் வீசிய துர்நாற்றம்! விஞ்ஞானி மகளின் மரணத்தில் இத்தனை மர்மங்களா? அண்ணனின் அதிரவைக்கும் வாக்குமூலம்!!!