அஜித் கார் ரேஸ்… விஜய் வருகை! சில்வர்ஸ்டோனில் நடக்கப்போவது என்ன?
காரில் டீச்சர் கொடுத்த முத்தம்..! அடுத்து வீட்டில் 16 வயது மாணவனுடன் அத்துமீறல்! அது எனக்கு டீனேஜ் ட்ரீம் மாதிரி இருந்துச்சு.... மாணவன் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!!!
இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் பகுதியில் உள்ள பிட்டர்ன் பார்க் பள்ளியில் பணியாற்றிய உடற்கல்வி ஆசிரியை பிரான்வென் ஜேம்ஸ் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2022-ல் 16 வயது மாணவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் மாணவர் அளித்த வீடியோ வாக்குமூலம் வழக்கில் முக்கிய ஆதாரமாக முன்வைக்கப்பட்டுள்ளது.
ஸ்னாப்சாட் மூலம் தொடர்பு... மாணவர் அளித்த வாக்குமூலம்
வழக்கில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவர் தனது வீடியோ வாக்குமூலத்தில், ஆசிரியை ஜேம்ஸ் முதலில் ஸ்னாப்சாட் செயலி மூலம் தன்னை தொடர்புகொண்டு பேசியதாக தெரிவித்துள்ளார். அதன்பின்னர் காரில் வைத்து தன்னை முத்தமிட்டதாகவும், பின்னர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: எவ்வளவு கூட்டம்... இப்படியா ரயிலில் தொங்கிட்டு போறது! ஓடும் லோக்கல் ரயிலில் இருந்து தண்டவாளத்தில் விழுந்த பெண்! பகீர் வீடியோ..!!!
“அந்த ஆசிரியை என்னை நேசிப்பதாகக் கூறினார். அது எனக்கு ஒரு டீனேஜ் ட்ரீம் போல இருந்தது” என மாணவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மாணவர் கூறிய இந்த தகவல்கள் தற்போது வழக்கு விசாரணையில் கவனம் பெற்றுள்ளன.
குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கும் ஆசிரியை
ஆனால், பிரான்வென் ஜேம்ஸ் இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளார். மாணவர் தனது நண்பர்களிடம் பெருமையாக பேசுவதற்காகவும், ஆசிரியையுடன் தொடர்பு இருந்ததாக தற்பெருமை காட்டுவதற்காகவும் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக அவர் தரப்பு வாதிடுகிறது.
மாணவரின் குற்றச்சாட்டுக்கும், தனது தரப்பு விளக்கத்துக்கும் இடையே முற்றிலும் மாறுபட்ட தகவல்கள் இருப்பதால், நீதிமன்ற விசாரணையில் இரு தரப்பினரின் வாதங்களும் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
நான்கு குற்றச்சாட்டுகளில் தொடரும் விசாரணை
பிரான்வென் ஜேம்ஸ் மீது மொத்தம் நான்கு முக்கிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆசிரியை மீதான குற்றச்சாட்டு தொடர்பாக நீதிமன்றத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவரின் வாக்குமூலம் உள்ளிட்ட ஆதாரங்கள் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் நீதிமன்ற விசாரணையின் முடிவைப் பொறுத்தே அமையும்.
இதையும் படிங்க: பயணி போல ஏறி படகில் சவாரி சென்ற குரங்கு! அதுக்குள்ள என்ன அவசரம்ன்னு தெரியல... ஆற்றில் குதித்து அது செஞ்ச வேலையை பாருங்க! வைரல் வீடியோ...!!!