உலகம் லைப் ஸ்டைல்

முடியை பிடித்து, கீழே தள்ளி, மேலே அமர்ந்து சண்டைபோட்ட இரண்டு நர்ஸ்கள்.! வைரலாகும் வீடியோ காட்சி.

Summary:

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இரண்டு பெண் செவிலியர்கள் முடியை பிடித்து இழுத்து சண்டைபோடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இரண்டு பெண் செவிலியர்கள் முடியை பிடித்து இழுத்து சண்டைபோடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

லண்டனில் இயங்கிவரும் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வரும் இரண்டு பெண் செவிலியர்கள் உணவருந்தும் இடத்திற்கு வந்துள்ளனனர். அப்போது அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு செவிலியர் மற்றொருவரை தள்ளிபோகுமாறு அவரை தள்ளிவிடவே இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து செவிலியர்கள் இருவரும் மாறி மாறி ஒருவர் முடியை பிடித்து, கட்டி புரண்டு சண்டை போட்டுள்ளனர். இருவரும் சண்டை போடுவதை அங்கிருந்த மற்றொரு செவிலியர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிடவே இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

மேலும், இரண்டு செவிலியர்கள் இப்படி சண்டை போட்டுக்கொள்வது பலரையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் இதுகுறித்து பல்வேறு கருத்துக்களையும் பதிவிட்டுவருகின்றனர்.


Advertisement