உலகம் லைப் ஸ்டைல் டெக்னாலஜி

நிரந்தரமாக வீட்டில் இருந்தே வேலை பாருங்கள்..! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட உலகின் முன்னணி நிறுவனம்..!

Summary:

Twitter says permanent work from home to their employees

கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகும் தங்கள் நிறுவன ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டில் இருந்தே வேலை பார்க்கலாம் என்ற அறிவிப்பை டிவிட்டர் நிறுவனம் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம், ஊரடங்கு போன்ற காரணங்களால் மக்கள் தங்கள் வீடுகளிலையே முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை பார்க்க அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டிவிட்டர் நிறுவனம் கொரோனா முடிந்த பிறகும் ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணிகளை தொடரலாம் என நிறுவன ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், நேரில் சென்று வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ள ஊழியர்கள் மட்டும் அலுவலகத்திற்கு வந்தால் போதும் எனவும் கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக கூகிள், பேஸ்புக் நிறுவனங்கள் 2020 வரை ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்க்க அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement