என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
கொரோனோவால் இறக்கவில்லை! நான்தான் கொன்றேன்! தனது 5 வயது மகனின் மரணம்! கால்பந்து வீரரின் பகீர் வாக்குமூலம்!

துருக்கியில் கால்பந்து வீரர்களில் மிகவும் பிரபலமானவர் டோக்டாஸ். இவரது 5வயது மகன் காசீமுக்கு சமீபத்தில் கடுமையான இருமல், காய்ச்சல் இருந்துள்ளது. இந்நிலையில் அவரை மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதால் மருத்துவமனையில் தனிமைப்படுத்தபட்டார். மேலும் அவருடன் அவரது தந்தை டோக்டாஸுடன் மருத்துவமனையிலேயே இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் அன்று மாலையே டோக்டாஸ் காசீமுக்கு திடீரென மூச்சுத்திணறல் இருப்பதாக மருத்துவர்களின் உதவியை நாடியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அ ளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறுவன் காசிம் உயிரிழந்தார். இந்நிலையில் கொரோனோவால் சிறுவன் காசீம் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் உறுதி செய்து அதன்படி அவரது உடலுக்கு உரிய இறுதிசடங்குகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் மகன் இறந்த 11நாட்களுக்கு பிறகு கால்பந்து வீரர் டோக்டாஸ் தனது மகன் கொரோனோவால் இறக்கவில்லை. தான்தான் கொலை செய்ததாக போலீசாரிடம் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் எனது மகன் பிறந்த நாளில் இருந்து என்னால் அவனை நேசிக்க முடியவில்லை அதற்கு காரணமும் தெரியவில்லை. அதனாலேயே அவனை கொலை செய்தேன். எனக்கு மனரீதியான பிரச்சினைகள் எதுவும் இல்லை என அவர் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்