BREAKING: விலகின கையோடு தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! ராஜினாமாவுக்கு அளித்த அதிரடி விளக்கம்... செம ஷாக்கில் எடப்பாடி..!!!



isakki-subbiah-joins-tvk-after-resigning-aiadmk-mla-pos

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். தவெக அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் என்.ஆனந்த் முன்னிலையில் நடந்த நிகழ்வில் அவர் கட்சியில் சேர்ந்தார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே அதிமுகவை விட்டு வெளியேறிய சத்யபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைந்திருந்த நிலையில், அதற்கு அடுத்த நாளே 4-வது நபராக இசக்கி சுப்பையாவும் தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: கிஜ்குல்லல்ல கோஜ்

விஜய் தலைமையை ஏற்ற இசக்கி சுப்பையா

தவெக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் விஜய் தலைமையை ஏற்று செயல்பட உள்ளதாக இசக்கி சுப்பையா தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியில் இணைந்த உடனே அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக அதிமுக உள்கட்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் அணிச்சரிவுகள் குறித்து பல்வேறு பேச்சுக்கள் நிலவி வந்த நிலையில், இந்த இணைவு கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.

ராஜினாமாவுக்கு அளித்த விளக்கம்

முன்னதாக, தனது அம்பாசமுத்திரம் தொகுதி மக்களின் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை முன்னிறுத்தியே எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததாக இசக்கி சுப்பையா விளக்கம் அளித்திருந்தார். தொகுதிக்கான பணிகளை விரைவாக முன்னெடுக்க வேண்டிய அவசியம் காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

அதிமுகவில் இருந்து தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விலகி வரும் சூழலில், இசக்கி சுப்பையாவின் இந்த முடிவு மாநில அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: கட்டுகட்டாக சரியும் அதிமுக! நேத்து 3 பேரு.. இன்னைக்கு அடுத்த ஆளு! அதிமுகவின் முக்கிய புள்ளி விலகல்.... நாளுக்கு நாள் நடக்கும் அதிரடி அரசியல்...!!!