33 ஆண்டுகளை கடந்து நீரை வெளியேற்றும் அதிசிய மரம்: ஆறுபோல ஓடும் தானூற்று நீர்.. கண்கவர் வீடியோ உள்ளே..!

33 ஆண்டுகளை கடந்து நீரை வெளியேற்றும் அதிசிய மரம்: ஆறுபோல ஓடும் தானூற்று நீர்.. கண்கவர் வீடியோ உள்ளே..!



tree-gushing-water-montenegro-dinosa-village-since-1990

 

தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள பால்கன் நாட்டில் உள்ளது Montenegro நகரம். இந்நகரில் உள்ள Dinosa கிராமத்தில் 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த பெர்ரி மரம் (Mulberry Tree) ஒன்று உள்ளது. 

கடந்த 1990ம் ஆண்டு பெய்த மழையின் காரணமாக, மரத்தின் வேர்பகுதிகளில் ஏற்பட்ட இடைவெளி, பூமிக்கடியில் இருந்து மரத்தில் வழியே இன்று வரை 33 ஆண்டுகளை கடந்து நீரை வெளியேற்றி வருகிறது.

இதனால் தற்போது அந்த மரத்தை சுற்றிலும் நீர் ஓடி, ஆறுபோல தாழ்வான பகுதிக்கு தவழ்ந்து செல்கிறது. பால்கன் நாடு மலைகளும், அதுசார்ந்த எழில்கொஞ்சும் பகுதிகளை கொண்டது ஆகும். அங்கு இயற்கையாகவே தன்னூற்றுகள் இருக்கின்றன.

இதனால் நிலத்தடி நீர் தொடர்ந்து மரத்தின் வழியே வெளியேறி வருகிறது. இதுதொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தன்னூற்று தமிழகத்திலும் அதிசியமில்லாத இயற்கை நிகழ்வாக இருந்து வந்தது. ஆனால், இன்று அந்நிலை இல்லை என்பதே வருத்தம்.