சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு... இரண்டு சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல்..!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு... இரண்டு சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல்..!



The increase in the price of crude oil in the international market... It is reported that it has increased by two percent..

கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 2 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

ரஷ்யா, தங்களது கச்சா எண்ணெய்க்கு மேற்கத்திய நாடுகள் விலை வரம்பு நிா்ணயித்து இருப்பதற்கு பதிலடியாக, எண்ணெய் உற்பத்தியை அடுத்த மாதத்திலிருந்து குறைக்க இருப்பதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு (வெள்ளிக்கிழமை) அறிவித்தது. 

மேலும் விலை வரம்பை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிர்னையிக்கும் நாடுகளுக்கு இனி எண்ணெய் ஏற்றுமதி செய்யப்போவதில்லை என்று கூறியுள்ளது. அதற்கேற்ப, கச்சா எண்ணெய் உற்பத்தியில் அடுத்த மாதம் முதல் தினமும் 5 லட்சம் பேரல்கள் குறைக்கப்படும் என ரஷியா அறிவித்துள்ளது. 

ரஷிய எண்ணெயை பெரிதும் சாா்ந்திருக்கும் ஐரோப்பிய நாடுகள் இந்த அறிவிப்பால் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.