மீன் சூப் குடித்த பெண்! தொண்டையில் சிக்கிய முள் கழுத்துக்கு வெளியில் வந்தது! அதிர்ச்சி சம்பவம்...



thailand-woman-throat-fish-bone-viral-incident

தாய்லாந்தில் நிகழ்ந்த அதிர்ச்சிகரமான மருத்துவ சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பரவி வருகிறது. சூரியன் புப்பா-ஆர்ட் என்ற பெயரில் செயல்படும் பேஸ்புக் பயனரின் மனைவி சாங், சில வாரங்களுக்கு முன் மீன் சூப் சாப்பிட்டபோது, ஒரு கூரிய மீன் எலும்பு தொண்டையில் சிக்கியது.

இந்த தொண்டை வலியில் தொடர முதலில் வீட்டுவைத்திய முறைகளால் குணமடையவில்லை. முதல் மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டும், எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து சென்ற இரண்டாவது மருத்துவமனையிலும் வலி நிவாரண மாத்திரைகள் மட்டும் வழங்கப்பட்டன.

ஜூன் 17 ஆம் தேதி, சாங் தன் கழுத்தில் தைலம் தடவியபோது, தோலில் வலியுடன் கூடிய ஒரு கூரிய பொருள் வெளியே வரத் துவங்கியது. மேலாக அழுத்தம் கொடுத்ததும், சுமார் இரண்டு சென்டிமீட்டர் நீளமுடைய மீன் எலும்பு வெளியே வந்தது. இதனை அவரது கணவர் படம்பிடித்து பேஸ்புக்கில் பகிர்ந்தார்.

இதையும் படிங்க: ஒரே மாதத்தில் 20-க்கும் அதிகமானோர் மாரடைப்பால் அடுத்தடுத்து மரணம்! இதற்கு கோவிட்-19 தடுப்பூசி தான் காரணமா? பகீர் தகவல்....

மருத்துவர்கள் நடத்திய அறுவை சிகிச்சை

மூன்றாவது முறையாக மருத்துவமனைக்கு செல்லப்பட்டபோது, மருத்துவர்கள் அந்த மீன் எலும்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். "இது போல ஒரு சம்பவம் இதுவரை பார்க்கப்படவில்லை" என மருத்துவர்கள் ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர்.

மீன் சாப்பிடும் போது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்

சூரியன் தனது பதிவில், "மீன் சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும், சிறிய தவறுகள் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்" என மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

 

 

இதையும் படிங்க: உலகமே அழிந்தாலும் அழியாத பூச்சி எது தெரியுமா? இதுக்கலாம் அழிவே இல்லையாம்....