உலகமே அழிந்தாலும் அழியாத பூச்சி எது தெரியுமா? இதுக்கலாம் அழிவே இல்லையாம்....

இன்றைய உலகத்தில் அணு ஆயுதங்கள் போர்களுக்காக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக மாநிலங்கள் அழிகின்றன, உயிர்கள் பறிக்கப்படுகின்றன, கட்டிடங்கள் இடிக்கின்றன மற்றும் உணவு நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. குழந்தைகள் கூட உயிரிழக்கின்றனர்.
அழிவை அலட்சியமாக பார்க்கும் சமூகங்கள்
இத்தகைய பயங்கர நிலைகளையும், நாம் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து பகிரும் அளவிற்கு மாறிவிட்டோம். ஆனால் இந்த நிலைமையிலும் சில அழியாத உயிரினங்கள் இருக்கின்றன.
மனிதனை விட சக்திவாய்ந்த உயிரினங்கள்
இவ்வுலகில் மனிதனே அழிவடையும் நிலையில் இருக்க, சில விலங்குகள் அணு கதிர்வீச்சையும் பட்டினியையும் தாங்கும் சக்தி கொண்டுள்ளன. அணுசக்தி உலகம் முழுவதும் பரவினாலும், அவை தங்கள் வாழ்க்கையை தொடரும். இங்கே அத்தகைய உயிரினங்களைப் பார்க்கலாம்.
இதையும் படிங்க: விமான ஓடுதளத்தில் திடீரென புகுந்த கரடி... வைரல் வீடியோ...
கரப்பான் பூச்சி கதிர்வீச்சில் வாழும் வீரன்
சமையலறை அலமாரிகளில் பொதுவாக காணப்படும் கரப்பான் பூச்சி, 10,000 ரேட்ஸ் வரை அணு கதிர்வீச்சை தாங்கும் திறன் கொண்டது. ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட பொழுதும், 1000 அடி அருகிலிருந்த கரப்பான் பூச்சிகள் பாதிக்கப்படாமல் வாழ்ந்தன.
தேள்ளின் வல்லமை
தேள்கள், மற்ற உயிரினங்களை விட அதிக அளவிலான UV கதிர்வீச்சுகளை தாங்கும் தன்மை கொண்டவை. சில தேள்கள் இருட்டிலும் ஒளிரும் தன்மை கொண்டிருப்பதோடு, பனியில் உறைந்தாலும் மீண்டும் உயிர்பெற்று வாழும் அற்புத ஆற்றல் உடையவை.
பழ ஈக்கள் கதிர்வீச்சு வீரர்கள்
பழங்களிலும் காய்களிலும் வாழும் பழ ஈக்கள், 64,000 ரேட்ஸ் வரை கதிர்வீச்சை தாங்கும். இவை மனிதனைவிட அதிக கதிர்களை உடலில் உறிஞ்சும். வாழ்க்கை சுழற்சி 30 நாட்களாக இருந்தாலும், அணுகுண்டு தாக்கத்திலும் கூட இன்னும் 30 நாட்கள் உயிருடன் வாழும் ஆற்றல் கொண்டவை.
இதையும் படிங்க: உயிருடன் உள்ள புழுக்களை தொடர்ந்து வாந்தி எடுத்த 8 வயது சிறுமி! மருத்துவர் கூறிய அதிர்ச்சி காரணம்! இந்த தவறை மட்டும் மறந்து கூட செஞ்சுராதீங்க…!!!