உயிருடன் உள்ள புழுக்களை தொடர்ந்து வாந்தி எடுத்த 8 வயது சிறுமி! மருத்துவர் கூறிய அதிர்ச்சி காரணம்! இந்த தவறை மட்டும் மறந்து கூட செஞ்சுராதீங்க…!!!

சீனாவின் யாங்சோ நகரில் ஏற்பட்ட ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம், மருத்துவ வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 8 வயது சிறுமி ஒருவர், தினமும் உயிருடன் உள்ள சிறிய பூச்சிகளை வாந்தி எடுத்து வந்துள்ளார். இது தொடர்பான செய்தியை South China Morning Post வெளியிட்டுள்ளது
மருத்தவர்கள் குழப்பத்தில்
சுமார் ஒரு மாதமாக இந்த வாந்தி நிலை தொடர்ந்ததையடுத்து, பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இருந்தும் சிறுமியின் உடலில் ஏன் இத்தகைய எதிர்வினை நிகழ்கிறது என்பது தெரியாமல் மருத்துவர்கள் திகைத்தனர். மேலும், குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கோ எந்தவித அறிகுறிகளும் காணப்படவில்லை.
பூச்சி வகையை கண்டுபிடித்த மருத்துவர்
சூச்சோவ் பல்கலைக்கழகத்தின் குழந்தைகள் மருத்துவமனையின் மருத்துவர் Zhang Bingbing, சிறுமி வாந்தியில் உள்ள பூச்சிகளை தொற்று பரிசோதனை மையத்துக்கு அனுப்ப ஆலோசனை வழங்கினார். Yangzhou CDC மேற்கொண்ட ஆய்வில், அது drain fly larvae என கண்டறியப்பட்டது. இவை பொதுவாக கழிப்பறை மற்றும் சமையலறை போன்ற ஈரமான இடங்களில் வளரும் பூச்சிகள் ஆகும்.
இதையும் படிங்க: வேகமாக வந்த கார்! நொடியில் சக்கரத்தில் சிக்கி பலியான பெண்! நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி....
தீவிர சுகாதார சிக்கல்கள்
பின்னர், சிறுமி வசிக்கும் வீட்டின் அடித்தள நீர்நிலைகள் அழுக்கடைந்துள்ளன என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நீர் வாயில் சென்றதால் பூச்சி லார்வாக்கள் உடலுக்குள் சென்றிருக்க வாய்ப்பு உள்ளது. இவை நேரடியாக நோய்களை பரப்பாமல் இருந்தாலும், பல பாக்டீரியாக்களை தாங்கி இருக்கக்கூடியவை. இதனால் தீவிர தொற்றுகள் ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முக்கியம்
சுகாதார நிபுணர்கள் கூறுவதாவது:
கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம்
கழிப்பறை மற்றும் சமையலறைகளை வறண்டும் சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும்
டிரெயின் வழியாக கொதிக்கும் நீர், உப்பு மற்றும் பேக்கிங் சோடா ஊற்றுவதால் இத்தகைய பூச்சிகளை ஒழிக்க முடியும்
பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்
வன்கொடுமையான தொற்றுநோய்கள், தாமதமாக கண்டறியப்படும்போது உயிரிழப்புக்கு காரணமாகலாம். எனவே, இத்தகைய அசாதாரண அறிகுறிகளை நேரில் கண்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். சுகாதாரத்தைக் புறக்கணிக்க கூடாது என்பது நிபுணர்களின் வலியுறுத்தல்.
இதையும் படிங்க: இன்ஸ்டா பழக்கத்தால் நடந்த கொடூர சம்பவம்! 8-ம் வகுப்பு மாணவர்கள் செய்த காரியத்தை பாருங்க! அதிர்ச்சியில் பெற்றோர்....