விஜய்க்கு ஜோதிடர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! அதன்படி பிளானை போட்டு காயை நகர்த்தும் விஜய்! தவெக குறி வைக்கும் முக்கிய தொகுதி இதுதான்....! சூடு பிடிக்கும் 2026-ன் தேர்தல் களம்!
தமிழக அரசியல் களத்தில் புதிய மாற்றங்களை உருவாக்கும் முயற்சியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். வரவிருக்கும் தேர்தலில் அவர் எந்தத் தொகுதியில் களமிறங்கப் போகிறார் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, வேளச்சேரி தொகுதி அவரது முக்கியத் தேர்வாக இருக்கக்கூடும் என பேசப்படுகிறது.
‘வி’ சென்டிமெண்ட் தொடரும் விஜயின் அரசியல் நடை
விஜய் தனது அரசியல் பயணத்தில் ‘வி’ என்ற எழுத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருவது கவனிக்கத்தக்கது. கட்சியின் பெயர் முதல் விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநாடு வரை அனைத்திலும் இந்த ‘வி’ சென்டிமெண்ட் தொடர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் விக்கிரவாண்டி, விருகம்பாக்கம், வில்லிவாக்கம் போன்ற தொகுதிகள் முதலில் பரிசீலனையில் இருந்தன.
நகர்ப்புற வாக்காளர்கள் நிறைந்த வேளச்சேரி
இறுதியில், நகர்ப்புற வளர்ச்சியும் இளைஞர் வாக்காளர்களின் ஆதிக்கமும் கொண்ட வேளச்சேரி தொகுதி முன்னணியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் ஐடி துறையில் பணியாற்றும் இளைஞர்கள் அதிகம் வசிக்கும் இந்தப் பகுதி, விஜயின் இமேஜிற்கு சாதகமாக அமையும் என கட்சி வட்டாரங்கள் நம்புகின்றன.
இதையும் படிங்க: மார்னிங் மகிழ்ச்சிசியில் எடப்பாடி! அதிமுகவுடன் கூட்டணி.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்! அரசியலில் புதிய திருப்பம்!
நட்சத்திரப் போட்டிக்கு வாய்ப்பு
வேளச்சேரி தொகுதியில் பாஜக சார்பில் மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜே.சூர்யா போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், விஜய் களமிறங்கினால் அங்கு ஒரு நட்சத்திரப் போட்டி உருவாகும் சூழல் நிலவுகிறது. சென்னைக்குள் உள்ள இந்தத் தொகுதி, பிரச்சார பணிகளுக்கும் மாநில அரசியல் நடவடிக்கைகளுக்கும் வசதியானதாக இருக்கும் என்பதும் முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
விக்கிரவாண்டி மாநாட்டில் வெளிப்பட்ட அரசியல் எழுச்சியை தேர்தல் களத்திலும் பிரதிபலிக்கச் செய்ய விஜய் உறுதியாக உள்ளார். ஜோதிட ஆலோசனைகளின் அடிப்படையில் ‘வி’ சென்டிமெண்ட் தொடரப்படுவதாக தகவல்கள் வந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை தொண்டர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். வேளச்சேரி விஜயின் அரசியல் பயணத்தில் முக்கிய திருப்பமாக அமையுமா என்பது விரைவில் தெரியவரும்.