ஒரே மாதத்தில் 20-க்கும் அதிகமானோர் மாரடைப்பால் அடுத்தடுத்து மரணம்! இதற்கு கோவிட்-19 தடுப்பூசி தான் காரணமா? பகீர் தகவல்....



hassan-heart-attack-deaths-investigation

கர்நாடக மாநிலத்தின் ஹசன் மாவட்டத்தில், கடந்த ஒரு மாதத்தில் 20க்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடர்ச்சியான மரணங்கள் மக்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மாநில முதல்வர் சித்தராமையா, தனது X பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த சம்பவம் அரசால் தீவிரமாகக் கவனிக்கப்பட்டு, ஜெயதேவா இருதய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் டாக்டர் ரவீந்திரநாத் தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த குழு 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இளம் வயதினருக்கான மரணம் மற்றும் தடுப்பூசி தொடர்பு

கடந்த மாதம் முதற்கொண்டே இளம் வயதினருக்கே மாரடைப்பு ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், இது தொடர்பாக கொரோனா தடுப்பூசிக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் குழுவினருக்கு விசாரணை நடத்த உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உலகமே அழிந்தாலும் அழியாத பூச்சி எது தெரியுமா? இதுக்கலாம் அழிவே இல்லையாம்....

பொதுமக்களுக்கு சித்தராமையாவின் வேண்டுகோள்

நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால், அலட்சியம் காட்டாமல் அருகிலுள்ள சுகாதார நிலையங்களை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும் என்று சித்தராமையா கேட்டுக்கொண்டுள்ளார்.

தடுப்பூசி காரணமா என்ற சர்ச்சை

சித்தராமையா தனது பதிவில், கொரோனா தடுப்பூசியும் சிலருக்கு மாரடைப்புக்கு காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளதென கூறியுள்ளார். ஆனால் இதனை மத்திய அரசு மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

இதையும் படிங்க: விமான ஓடுதளத்தில் திடீரென புகுந்த கரடி... வைரல் வீடியோ...