Solar Flares: சூரியனில் ஏற்பட்ட மாற்றம்.. இந்தியாவுக்கு பேராபத்து..!



Solar Flares Alert Sun Eruptions May Disrupt Satellite Services in India, Warns ISRO

விண்வெளியில் நிகழும் மாற்றம் காரணமாக இந்தியாவுக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி முதல், சூரியனின் 11 ஆண்டுகால சுழற்சியால் சூரியப்புள்ளி கூட்டங்களில் அடுத்தடுத்து வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வலிமையான சூரிய துகள்கள் விண்வெளியில் பரவியுள்ளது. இது இந்தியாவில் செயற்கைகோள் சேவைகளை பாதிக்க வாய்ப்புள்ளதாக இஸ்ரோ எச்சரித்துள்ளது.

நாசா உறுதி:

சூரிய வெடிப்பு என்பது சூரியனின் 11 ஆண்டுகால செயல்பாட்டு இயற்கை நிகழ்வு ஆகும். கடந்த பிப்ரவரி முதல் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதை நாசாவும் உறுதி செய்துள்ளது. சூரியன் தனது உச்சகட்ட செயல்பாட்டில் இருப்பதால், சமீபத்தில் இவ்வாறான நிகழ்வுகள் அதிகரித்துள்ளது. 

இதையும் படிங்க: நகைப்பிரியர்களுக்கு பேரிடி.. புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி.. ரூ.90,000ஐ நெருங்குகிறது.!

World news

பாதிப்பு என்ன?

மின்காந்த கதிர்வீச்சுகள் வெடிப்புகளுக்கு பின் சில நிமிடங்களில் பூமியை வந்தடையும். இது மனிதர்களை நேரடியாக பாதிக்காது என்றாலும், வளிமண்டலத்தில் இருக்கும் ஐனோஸ்பியர் அடுக்கை பாதிக்கும். இதனால் செயற்கைகோள், ரேடார் சிக்னலை பாதிக்கும். 

சேவைகள் முடங்கும் அபாயம்:

இந்தியாவுக்கு தகவல் தொழில்நுட்பம், வானிலை, ரேடார் சேவைகள், பாதுகாப்பு & பேரிடர் சேவைகள் பாதிக்கும். வானொலி தடையும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இஸ்ரோ 50 க்கும் மேற்பட்ட முக்கியமான செயற்கைகோள்களை தனது கண்காணிப்பில் வைத்துள்ளது. இந்தியாவைப்போல செயற்கைகோள்களை நம்பி இருக்கும் பிற நாடுகளுக்கும் இந்த விஷயம் தலைவலி பிரச்சனையாக இருக்கிறது.
 

இதையும் படிங்க: Alien Arrivals in 2026: பிறந்தது புத்தாண்டு.. பூமிக்கு வரும் ஏலியன்கள்? திடுக்கிடவைக்கும் தகவல்.!