Alien Arrivals in 2026: பிறந்தது புத்தாண்டு.. பூமிக்கு வரும் ஏலியன்கள்? திடுக்கிடவைக்கும் தகவல்.!



Alien Arrival in 2026? Baba Vanga’s Prediction Sparks Global Curiosity

2025ல் உலகம் பல இயற்கை பேரிடர்களை கண்டு பதறும் நிலையில், 2026ல் ஏலியன்களுடன் பூமியில் இருக்கும் மக்களுக்கு தொடர்பு ஏற்படலாம் அல்லது அவர்களின் இருப்பை அறியலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.  

2026ஐ வரவேற்போம்: 

உலகில் ஒவ்வொருவரும் எதிர்பார்த்த புத்தாண்டு 2026 பிறந்துவிட்டது. இந்த புத்தாண்டை புதிய ஆண்டாக ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் வெற்றிப்பாதையை உருவாக்க ஒவ்வொருவரும் உறுதியெடுத்து பயணிக்க திட்டமிட்டு இருக்கின்றனர். 'நன்றே செய், அதையும் இன்றே செய்' என்பதைப்போல, ஒருசிலர் இன்று முதல் தங்களின் பயணத்தை தாமதமின்றி தொடங்கிவிட்டனர். இதனிடையே, உலகமும் 2026ல் எதிர்கொள்ளவுள்ள சில கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன. 

இதையும் படிங்க: நகைப்பிரியர்களுக்கு பேரிடி.. புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி.. ரூ.90,000ஐ நெருங்குகிறது.!

தீர்க்க தரிசனம் கண்டவர்:

பல்கெரியா நாட்டினைச் சேர்ந்த எதிர்கால கணிப்பாளர் பாபா வாங்கா, 2026ல் ஏலியன்கள் வருகை பூமியில் இருக்கும் என கண்டித்துள்ளார். இத்துடன் சில எதிர்கால குறிப்புகளையும் அவர் தெரிவித்துள்ளார். அதுதொடர்பான சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தனது சிறுவயதில் இயற்கை பேரிடர் காரணமாக பார்வையை இழந்தவர், இறைவனின் அருளால் எதிர்காலத்தை கண்டு அதனை தீர்க்க தரிசனமாக விட்டுச் சென்றுள்ளார்.

new year

பாபா வங்கா 2026 கணிப்புகள்:

அவரது கணிப்புப்படி, 2026ம் ஆண்டு முந்தைய ஆண்டுகளை விட மோசமானதாக இருக்கலாம். உலகளவில் ஏற்பட்டுள்ள போர் அபாயம் காரணமாக, 2026ல் மூன்றாம் உலகப்போர் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன. உலகளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, வெள்ளம், கடுமையான காலநிலை மாற்றம் ஏற்படலாம். இயற்கை சீற்றத்தின் காரணமாக உலகளவில் 8% நிலப்பகுதிகள் பாதிக்கப்படும்.  

ரஷ்யாவில் மாற்றம்:

மேலும், ஏஐ தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து மனிதர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகும். திருப்மனை கொண்ட ஆண்டாக இருக்கலாம். விண்வெளியில் இருந்து மர்ம பொருள் உலகில் வரும். ஏலியன்களுடன் மனிதர்களுக்கு தொடர்பு ஏற்படும். ரஷ்யாவின் அரசியலில் தலைமை மாற்றம் உண்டாகும். ரஷ்யா-உக்ரைன் போரில் மாற்றம் ஏற்படும். நோய் உருவாகுதல், தடுத்தல் நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.