சீனாவிலிருந்து தமிழகத்திற்கு வந்த சாப்ட்வேர் இன்ஜினியர்! கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் சிறப்பு வார்டில் அனுமதி!

சீனாவிலிருந்து தமிழகத்திற்கு வந்த சாப்ட்வேர் இன்ஜினியர்! கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் சிறப்பு வார்டில் அனுமதி!


software-engineer-came-from-china-with-corono-virus-sym

சீனாவில் ஹுபெய் மாகாணத்தில் உள்ள உஹான் நகரில் இருந்து தோன்றிய கொரனோ வைரஸ் தற்போது அதிவேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த கொரனோ வைரஸ் பாதிப்பினால் இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 8000க்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் உலக நாடுகள் முழுவதும் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது.

இந்தக் கொடிய வைரஸ் சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, தாய்லாந்து, உள்ளிட்ட பல நாடுகளிலும் பரவி வருகிறது. மேலும் தற்போது அந்த பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. சீனாவின் ஊஹானில் இருந்து கேரளா திரும்பிய மருத்துவ மாணவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் திருசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

Coronovirus

இதனிடையே தற்போது சீனாவில் இருந்து திருவண்ணாமலைக்கு சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் திரும்பியுள்ளார். அவருக்கு 2 நாட்களாக சளி, இருமல் உள்ளது. அதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி தனி சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது  ரத்த மாதிரிகள் சோதனைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சோதனையை தொடர்ந்து கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கிறதா என்பது உறுதியாக தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.