யாருக்கிட்ட.! எங்ககிட்டேவா.! தைரியமாக விடாமல் தன்னை சீண்டிய அணிலிடம் சீரிய பாம்பு! வைரலாகும் வீடியோ.

யாருக்கிட்ட.! எங்ககிட்டேவா.! தைரியமாக விடாமல் தன்னை சீண்டிய அணிலிடம் சீரிய பாம்பு! வைரலாகும் வீடியோ.


Snake surreal

பாம்பு என்றால் படையே நடுங்கும். ஆனால் இங்கு ஒரு அணில் தைரியமாக விடாமல் பாம்பை சீண்டும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அணில் தன்னை கொத்த வரும் பாம்பிடமிருந்து மின்னல் வேகத்தில் செல்லும் காட்சி அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. 

தென்னாப்பிரிக்காவில் உள்ள கலாகடி உயிரியல் பூங்காவில் மஞ்சள் நிறத்தில் விஷ பாம்பு ஒன்று சுற்றி வந்தது. அப்போது மரத்தின் மேல் இருந்த ஒரு அணில் பாம்பை பார்த்ததும் வேகமாக கீழே இறங்கி வந்து அதனுடன் தைரியமாக சண்டையிடத் தொடங்கியது. 

snake

தனது வாலை ஆயுதமாகப் பயன்படுத்திய அந்த அணில், பாம்பின் கவனத்தைத் லாவகமாக  திசை திருப்பி அதைத் தாக்க முயல்கிறது.அதேநேரத்தில் பாம்பும் அணிலை கொத்துவதற்கு முயல்கிறது. ஆனால் அணில் மின்னல் வேகத்தில் எஸ்கேப் ஆகிறது. 

அணில் வேண்டுமென்றே அருகில் சென்று பாம்பை சீண்டுகிறது. எப்படியாவது அணிலை போட்டு தள்ளிவிட வேண்டும் என பாம்பும் சீறிக்கொண்டு கொத்துவதற்கு முயல்கிறது. தற்போது இந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.