நாம் ஒரு நாளைக்கு எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும் தெரியுமா? வெளியான அதிர்ச்சித் தகவல்!

நாம் ஒரு நாளைக்கு எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும் தெரியுமா? வெளியான அதிர்ச்சித் தகவல்!


Sleeping time

தூக்கம் என்பது மனிதர்களுக்கு மிகமிக அவசியமான ஒன்று. இரவு சரியாகத் தூங்கவில்லை என்றால் அந்த நாள் முழுவதும் உடல் சோர்வாகவே இருக்கும். தூக்கம் மனிதர்களின் ஆயுளை கூட்டுகிறது. மன மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. மேலும் வலி நிவாரணியாக செயல்படுகிறது.

தனிப்பட்ட மனிதர்களின் சொந்த வாழ்க்கை முறைதான் இந்த தூக்கத்துக்கான தேவைகளை புரிந்துகொள்ள உதவ முக்கியமான அம்சம் என்று கூறும் அமெரிக்க தேசிய தூக்க நிறுவனம் ஆனால் ஒருவரது வயது என்ன என்பதைப் பொறுத்து பொதுவான பரிந்துரைகளைத் தரலாம் என்கிறது.

sleeping

பிறந்த குழந்தைகள் ( 0 முதல் மூன்று மாதங்கள் வரை) : புதிதாக பிறந்த குழந்தைகள் நாளொன்றுக்கு 14லிருந்து 17 மணிநேரம் வரை தூங்க வேண்டும் 

குழந்தைகள் (4-முதல் 11 மாதம் வரை): தினசரி 12லிருந்து 15 மணி நேரங்கள் வரை தூங்கவேண்டும், குறைந்த்து 10 மணி நேரங்கள் தூங்கினால் கூட போதும். 

தளிர்நடை பயிலும் குழந்தைகள் ( 1லிருந்து 2 வயது வரை): தினமும் 11லிருந்து 14 மணி நேரங்கள் வரை தூங்க வேண்டும் . 

sleeping

பள்ளி செல்லும் முன் வயதுக் குழந்தைகள் ( 3லிருந்து 5 வயது வரை) : தினமும் 10லிருந்து 13 மணி நேரங்கள் தூங்கவேண்டும்.

பள்ளி செல்லும் வயது சிறார்கள் ( 6லிருந்து 13 வயது வரை): ஒன்பது மணிநேரத்திலிருந்து 11 மணிநேரம் வரை தினமும் தூங்கவேண்டும்.

பதின்பருவச் சிறார்கள் (14 முதல் 17 வயது வரை): பரிந்துரைக்கப்பட்ட தூக்க நேரம் என்பது 8லிருந்து 10 மணிநேரம் வரை.

வயது வந்த இளைஞர்கள் ( 18லிருந்து 25 வயது வரை): தினமும் 7லிருந்து 9 மணி நேரங்கள் வரை தூங்கலாம்.