கொரோனாவுக்கு எதிரான போரில் களமிறங்குகிறது கொரோனா எதிர்ப்பு சூயிங்கம்.. அசத்தல் தகவல்.!

கொரோனாவுக்கு எதிரான போரில் களமிறங்குகிறது கொரோனா எதிர்ப்பு சூயிங்கம்.. அசத்தல் தகவல்.!


shortly-may-be-corona-against-chewing-gum-will-introduc

கோவிட் - 19 வைரசுக்கு எதிரான போரில் விரைவில் கொரோனாவை கட்டுக்குள் வைக்கும் சூயிங்கமும் அறிமுகம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2019 ஆம் வருடம் உலக மக்களிடையே அறிமுகமான கொரோனா 19 வைரஸ், இன்று பல பரிணாமங்களை பெற்றுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் அதன் வீரியம் பொறுமையாக உருமாறி, மக்களை பெரும் இன்னலுக்கு உள்ளாக்கி வருகிறது. கொரோனாவின் தாக்கத்தில் இருந்து குறைந்தளவு விடுபட்டுவிட்டோம் என்று மக்கள் நம்பிக்கையில் இருந்த நிலையில், தற்போது தென்னாபிரிக்க நாடுகளில் ஒமிக்ரான் வகை கொரோனா பரவ தொடங்கிவிட்டது. 

இந்த புதிய வகை கொரோனா வைரஸானது, கொரோனாவை விட வீரியம் மிகுந்தது. இதனால் உயிரிழப்பு கொரோனாவை விட அதிகமாக இருக்கலாம் என உலக சுகாதார அமைப்பும், மருத்துவ நிபுணர்களும் எச்சரித்துள்ள நிலையில், பென்சில்வேனியா பல்கலைக்கழகம் கொரோனா பரவுதலை குறைக்கும் பொருட்டு, சுவிங்கம் தயாரிக்கும் சோதனையில் ஈடுபட்டு வந்தது. இந்த சோதனையின் முக்கிய அம்சமாக, கொரோனா பரவியவர் அல்லது அறிகுறி இல்லாமல் இருப்பவரிடம் இருந்து, பிறரிடம் பேச்சுக்களின் போது வாய் வழியாக கொரோனா பரவுவதை தடுக்க தேவையான சுவிங்கம் தயாரித்து வழங்குவது இருக்கிறது. 

Corona virus

பென்சில்வேனியா பல்கலைக்கழகம் தயாரித்துள்ள சுவிங்கம் மேலும் நேரத்தில், வாயில் உள்ள கொரோனாவின் அளவு குறையும் எனவும், இருமல் அல்லது பேச்சு நேரத்தில் பரவும் கொரோனாவை இது குறைக்காலம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த சுவிங்கம் தற்போது வரை மக்கள் பயன்பாட்டுக்கு வராத நிலையில், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து பாதுகாப்புத்துறையினர் சோதனை செய்து வருவதாகவும் தெரியவருகிறது. மேலும், இது குறைந்தளவு தடுப்பூசி கிடைக்கும் நாடுகள் அல்லது தடுப்பூசியை கிடைக்காத நாடுகளில் பெரும் பேருதவியை செய்யலாம் என்றும் தெரிவிக்கின்றனர். 

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவரின் உமிழ்நீர் மாதிரியை பயன்படுத்தி, ஆய்வாளர்கள் சோதனை குழாயில் வைத்து சுவிங்கத்தை சோதனை செய்ததில், நம்பிக்கையான முடிவுகள் வந்திருப்பதாகவும், விரைவில் இது பயன்பாட்டுக்கு வரலாம் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சூயிங்கம் கொரோனா பரவுதலை மட்டுமே தடுக்க வல்லது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் முகக்கவசம் போன்றது.