உலகம் Covid-19 Corono+

நாய், பூனை போன்றவற்றை சாப்பிட திடீர் தடை..! சீனர்களுக்கு ஆப்பு வைத்த சீன அரசு..! உலகளவில் பெருகும் வரவேற்பு.!

Summary:

Shenzhen becomes first Chinese city to ban eating cats and dogs

இன்று உலகையே ஆட்டிப்படைக்கும் கொடூர கொரோனா வைரஸ் தோன்ற காரணமாக சீனாவின் உஹான் நகரம் இருந்துவரும் நிலையியல், சீனாவின் Shenzhen மாகாணத்தில் இயற்றப்பட்டுள்ள சட்டம் உலகளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா பரவலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது சீனர்களின் வரையறுக்கப்படாத உணவு முறைகள்தான். கண்டதையும் தின்று இன்று உலகையே கொரோனாவின் பிடியில் சிக்க வைத்துள்ளது சீனர்களின் உணவு பழக்க வழக்கம். இந்நிலையில், வரும் மே மாதம் 1 ஆம் தேதி முதல், நாய், பூனை முதலியவற்றை உண்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை நிறைவேற்ற அந்நாட்டில் இருக்கும் விலங்குகள் நல மையம் பலமுறை முயற்சி செய்தும் இதற்கு பலன் கிடைக்கவில்லை. தற்போது கொரோனா என்ற கொடிய வைரஸால் 13 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சீனாவின் Shenzhen மாகாணத்தில் நேற்று இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

நாய், பூனை முதலியவற்றை உன்பதற்கு தடை விதித்த முதல் நகரமாக சீனாவின் Shenzhen நகரம் அழைக்கப்படுகிறது. இந்த சட்டத்திற்கு பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.


Advertisement