பெண்கள் கழிவறைக்குள் சென்ற திருநங்கை! அங்கு காத்திருந்த பேரதிர்ச்சி! பின்பு நடந்தது.

பெண்கள் கழிவறைக்குள் சென்ற திருநங்கை! அங்கு காத்திருந்த பேரதிர்ச்சி! பின்பு நடந்தது.



Shemale not allowed in public toilet in Philippines

பிலிப்பைன்ஸ் நாட்டில் பெண்கள் கழிவறைக்குள் சென்ற திருநங்கை ஒருவரை கழிவறையில் துப்புரவு வேலை செய்யும் பெண் ஒருவர் அடித்து விரட்டி காவல் துறையில் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றுக்கு சென்ற கிறிட்சென் என்ற திருநங்கை தனது வேலைகளை முடித்துக்கொண்டு இரவு 11 மணி அளவில் ஷாப்பிங் மாலில் இருக்கும் பெண்கள் கழிவறை ஒன்றில் நுழைந்துள்ளார். அப்போது அங்கிருந்த பெண் துப்புரவு தொழிலாளி ஒருவர் அந்த திருநங்கையிடம் நீ ஏன் பெண்கள் கழிவறைக்குள் வந்தாய்? நீ ஆண்கள் கழிவறைக்குள்தான் செல்ல வேண்டும் என சண்டை போட்டுள்ளார்.

World news

பின்னர் இருவரும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட சண்டை போட தகவல் காவல் துறைக்கு சென்றது. பின்பு அங்கு வந்த போலீசார் திருநங்கையை கைது செய்து அழைத்து சென்றனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியதை அடுத்து பல்வேறு கட்டணங்கள் எழுந்தன. மேலும் அந்த திருநங்கை மீது எந்த வழக்கில் வழக்கு பதிவு செய்வது என போலீசார் குழம்பினர்.

இதனை அடுத்து அந்த துப்புரவு தொழிலாளி வழக்கை வாபஸ் பெற்று கொண்டதை அடுத்து கிறிட்சென் விடுதலை செய்யப்பட்டார். மேலும் அந்த பெண் கிறிட்சென்னிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் ஒன்றையும் கொடுத்துள்ளார். இருப்பினும் இந்த சம்பவம் குறித்து தான் நீதிமன்றம் செல்ல இருப்பதாக கிறிட்சென் கூறியுள்ளார்.