21 வயதில் புற்றுநோயால் இளைஞர் பலி; முதுகு வலியை அலட்சியப்படுத்தியதால் நடந்த சோகம்.!

21 வயதில் புற்றுநோயால் இளைஞர் பலி; முதுகு வலியை அலட்சியப்படுத்தியதால் நடந்த சோகம்.!


scotland-youngster-died-cancer

 

ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள பெய்சலி பகுதியை சேர்ந்த இளைஞர் ஜெரால்ட் கிரீன் (வயது 21). இவர் வீட்டில் தனக்கென புதிய படுக்கையை வாங்கி உறங்கிய சில நாட்களில் முதுகுவலி காரணமாக அவதிப்பட்டார். இதனால் புதிய படுக்கை தனக்கு ஒத்துக்கொள்ளவில்லை என எண்ணி இருக்கிறார். 

இதனிடையே, சில நாட்களில் வாந்தி, இருமல், இரத்த வாந்தி போன்றவை ஏற்படவே, பதறிப்போன கிரீனின் தயார் பவுலா, ஜனவரி 19 அன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தார். 

Scotland News

முதலில் இரத்த சோகை பிரச்சனை இருப்பதை உறுதி செய்த மருத்துவர்கள், சிறுநீரகம் செயலிழந்து வருவதையும் உறுதி செய்தனர். பின் கோமா நிலைக்கு சென்றார். சில நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் அவர் கோமாவில் இருந்து விழித்ததும், அவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

ஜனவரி 30ம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 21 வயதாகும் இளைஞர் புற்றுநோயால் காலமானது அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.