சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
Breaking : ரஷ்யாவில் AN-24 விமானம் விபத்தில் 49 பேர் உடல் கருகி பலி ! மீட்புப் பணிகள் தீவிரம்...
ரஷ்யாவின் அமுர் பிராந்தியத்தில், சீன எல்லையை ஒட்டிய பகுதியில் AN-24 பயணிகள் விமானம் திடீரென கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பயணித்த 49 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சைபீரியாவைச் சேர்ந்த அங்காரா விமான நிறுவனம் இயக்கிய இந்த விமானம், மேல் சுழற்சி நிலையில் தொடர்பு துண்டிக்கப்பட்டதுடன், அதன் பாகங்கள் நொறுங்கிய நிலையில் விழுந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது, சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதிகாரிகள் மற்றும் மீட்புத்துறையினர் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுற்றி தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மீண்டும் அதிர்ச்சி! 50 பயணிகளுடன் விழுந்து நொறுங்கிய விமானம்! ரஷ்யாவில் பரபரப்பு...