பறக்கும் விமானத்தில் கொரோனா குறித்து விமானிகள் அரட்டை.! 97 பேர் உயிரை காவு வாங்கிய பாகிஸ்தான் விமான விபத்து.!

reason for pakistan flight accident


reason for pakistan flight accident

பாகிஸ்தான் லாகூரில் இருந்து 91 பயணிகள், 8 ஊழியர்களுடன் கராச்சி நகருக்கு பாகிஸ்தான் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் ஏ-320 ரக ஏர்பஸ் விமானம் புறப்பட்டது. இந்நிலையில் விமானம் தரையிறங்க சில நிமிடங்களே இருந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் விழுந்து விமானம் நொறுங்கியது. 

அந்த விபத்தில் 25 வீடுகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த கோர விபத்தில் 97 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து விபத்தின் காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. கராச்சியில் பாகிஸ்தான் இன்டா்நேஷனல் ஏா்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியதற்கு, அதன் விமானிகளின் கவனக் குறைவே காரணம் என்று பூா்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Pakistan

விமானிகள் இருவரும் அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையுடன் அலட்சியமாக செயல்பட்டனா். மேலும், அவா்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டு கவனத்தை சிதற விட்டனா். கொரோனா நோய்த்தொற்று குறித்தே அவா்கள் தொடா்ந்து உரையாடி வந்துள்ளனர். இதன் காரணமாக, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளின் உத்தரவைப் பின்பற்ற அவா்கள் தவறி விட்டனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.