உலகில் ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டும் வினோத வகை ரத்தம் ! இரத்த வகையின் பெயர் என்ன தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்!



rare-blood-group-guadeloupe-negative-discovery

ஒரு பிரெஞ்சு பெண் 2011ஆம் ஆண்டு அறுவை சிகிச்சைக்காக முன்னதாக மருத்துவ பரிசோதனைக்காக இரத்தம் கொடுத்தபோது, அவளது இரத்தத்தில் உள்ள மர்ம ஆன்டிபாடி ஒன்று மருத்துவர்கள் கவனத்தை ஈர்த்தது. ஆரம்பத்தில் இது முக்கியத்துவம் பெறவில்லை.

ஆனால் 2019ல், விஞ்ஞானிகள் மீண்டும் அந்த மாதிரியை ஆய்வு செய்தபோது, அந்த பெண்ணின் மரபணுக்களில் அபூர்வ மாற்றம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் விளைவாக, புதிதாக "குவாடா நெகட்டிவ்" எனப்படும் ஒரு அரிதான இரத்த வகை கண்டுபிடிக்கப்பட்டது. இது தற்போது உலகம் முழுவதும் 48வது புதிய இரத்தக் குழுவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பெண், குவாடலூப்பில் பிறந்தவராக இருப்பதால், அந்த இடத்தின் பெயரை வைத்து இந்த புதிய இரத்த வகைக்கு “குவாடா நெகட்டிவ்” என்று பெயரிடப்பட்டது. இந்த இரத்த வகையைக் கொண்ட ஒரே நபர் இவர்தான் என்று பிரெஞ்சு இரத்த நிறுவனம் (EFS) உறுதிப்படுத்தியுள்ளது. இத்தகைய இரத்த வகை, அரிதான மரபணு மாற்றங்களை அடையாளம் காண விஞ்ஞானிகள் மேற்கொள்ளும் பரிசோதனைகளுக்கு வழிகாட்டியாக இருக்கலாம்.

இதையும் படிங்க: அடக்கடவுளே... இப்படி ஒரு ஹாஸ்பிட்டலா! ஆக்ஸிஜன் சிலிண்டரை கையில் பிடித்து சுவாசிக்க போராடும் நபர்! அதிர்ச்சியூட்டும் வீடியோ...

EFS நிறுவனம் கூறியுள்ளதாவது, இவ்வாறான அரிதான இரத்த வகைகள், உயர் அபாயத்தில் உள்ள நோயாளிகளுக்கு வசதியான சிகிச்சை தர முக்கிய பங்காற்றக்கூடியவை என்பதாகும்.

1901ல் கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் இரத்த வகைகளை A, B, O என வகைப்படுத்தியபோது, பின்னர் AB மற்றும் ரீசஸ் காரணி அடிப்படையில் 8 வகைகள் உருவானது. ஆனால் தற்போது 366 ஆன்டிஜென்களின் அடிப்படையில், இரத்த வகைகள் மிகவும் சிக்கலானவையாகவும், சிறிய மாற்றங்கள் கூட ஒரு புதிய வகையை உருவாக்க கூடியவையாகவும் இருக்கின்றன.

"குவாடா நெகட்டிவ்" இரத்த வகை, மனித உடலியல், மரபணு அறிவியல், மற்றும் இரத்த பரிமாற்ற சிகிச்சை முறைகளில் ஒரு புதிய யுக்தியாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: 20 வருடங்களாக ஹோமாவிலிருந்த சவுதியின் தூங்கும் இளவரசர் காலமானார்!