முடக்கப்பட்ட பிரபல பாடகரின் ட்விட்டர் கணக்கு.! இதுதான் காரணமா?? விளக்கமளித்த எலான் மஸ்க்!!

முடக்கப்பட்ட பிரபல பாடகரின் ட்விட்டர் கணக்கு.! இதுதான் காரணமா?? விளக்கமளித்த எலான் மஸ்க்!!


rap-singer-kanya-west-twitter-susbended

வன்முறைகளை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதால் பிரபல ராப் பாடகர் கன்யா வெஸ்ட் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக ட்விட்டர் சிஇஓ எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பிரபல ராப் பாடகராக வலம் வருபவர் கன்யா வெஸ்ட். பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் இவர் பல விருதுகளையும் வென்றுள்ளார்.

கன்யா வெஸ்ட் ஹிட்லர், நாஜிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார். மேலும் அவர் எலான் மஸ்க்குக்கு இடையேயான உரையாடல்களையும் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கன்யா வெஸ்ட் ட்விட்டர் கணக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக கூறபட்டுள்ளது.

Elan Musk

மேலும் இதுகுறித்து  நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு எலான் மஸ்க் முடிந்தவரை முயற்சித்தேன். ஆனால் அவர் மீண்டும் வன்முறையை தூண்டுவதற்கு எதிரான எங்களது விதிகளை மீறி செயல்பட்டார். அதனால் அவரது ட்விட்டர் கணக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.