உலகம் மருத்துவம் லைப் ஸ்டைல்

கர்ப்பிணியின் கருவில் தெரிந்த விசித்திர உருவம் ?? இளம் பெண் சொன்ன நெகிழ்ச்சி காரணம்!!

Summary:

Pregnant women found her father in baby scan

அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் 5 மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில் தனது வயிற்றில் இருக்கும் குழந்தையின் நிலையை அறிந்துகொள்ள மருத்துவரை அணுகியுள்ளார். அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அல்ட்ரா சவுண்ட் மூலம் மருத்துவர் வயிற்றில் இருக்கும் குழந்தையை காண்பித்துள்ளார்.

அப்போது, வயிற்றில் குழந்தையின் அருகில் ஏதோ விசித்திரமான உருவம் இருப்பதை பார்த்து அந்த பெண் பயந்துள்ளார். அதன்பிறகு, அந்த அல்ட்ரா ஸ்கேன் புகைப்படங்களை உத்து பார்த்தபோது யாரோ ஒருவர் வயிறில் இருக்கும் குழந்தைக்கு முத்தம் கொடுப்பதுபோல் அந்த காட்சி பதிவாகியிருந்தது.

உடனே, அது என் தந்தைதான், ஸ்கேனில் தெரிந்த அந்த விசித்திர உருவம் தனது தந்தைதான் என அந்த பெண் கூறியுள்ளார். தனது அல்ட்ரா ஸ்கேன் புகைப்படங்களையும் அந்த பெண் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அது உங்கள் தந்தை  கிடையாது, அல்டாசவுண்ட் ஸ்கேனின் போது, ஒளியின் மாற்றத்தினால் அப்படி தெரிந்திருக்க கூடும்  என இதுகுறித்து பலரும் பல்வேறுவிதமான கருத்துக்களை பதிவிட்டாலும் அது என் தந்தைதான் என அந்த பெண் உறுதியாக உள்ளாராம்.


Advertisement