கடும் உணவு பஞ்சம்..! எலும்பும் தோலுமாக இருக்கும் சிங்கங்கள்.! நெஞ்சை உலுக்கும் புகைப்படம்..!Poor lions no food Sudan lions

ஆப்பிரிக்க நாட்டின் சூடான் தலைநகரான கார்டூமில் அல்-குரேஷி என்னும் விலங்கியல் பூங்கா இயங்கி வருகிறது. இந்தப் பூங்காவில் ஐந்து சிங்கங்கள் வளர்க்கப்பட்டுவருகின்றன. கார்டூம் நகராட்சியால் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த பூங்கா சமீப காலமாக சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதர பின்னடைவு, உணவு பொருட்களின் விலை ஏற்றம் போன்ற காரணங்களால் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு சரியாக உணவு வழங்க முடியாமல் திண்டாடிவருகிறது.

Lions

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அங்குள்ள சிங்கங்களுக்கு அளிக்க போதுமான உணவு மற்றும் மருந்து இல்லாததால் ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பூங்காவில் உள்ள சிங்கங்கள் உடல் மெலிந்து, எலும்பு வெளியே தெரியும் அளவிற்கு மிக மோசமான நிலையில் உள்ளது.

தினம் தினம் பசி கொடுமையால் அந்த சிங்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக துடி துடித்து இறந்துவரும் சம்பவம் தற்போது புகைப்படமாக வெளியாகி உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது.

Lions