மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
ரோந்து சென்ற போலீசாருக்கு வந்த வித்தியாசமான வாசனை! இரும்பு ஷட்டரை அறுத்து பார்த்தபோது கண்ட அதிர்ச்சி காட்சி!
பிரித்தானியாவில் மாட்டின் ஜோபின் என்ற போலீசார் கேட்ஷெட் என்ற பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது அங்கிருந்த குடோனில் இருந்து வித்தியாசமான வாசனை வீசியுள்ளது. இந்நிலையில் சந்தேகமடைந்த அவர் இதுகுறித்து தனது சக போலீசார்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த அவர்கள் குடோனின் ஷட்டரை மின்ரம்பத்தால் அறுத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு அவர்களுக்கு பெரும்அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது குடோனின் உள்ளே கால்பந்து மைதானம் அளவிலான இடத்தில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இதுதொடர்பாக அல்பேனிய நாட்டைச் சேர்ந்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அப்பகுதியில் இருந்த கஞ்சாவின் மதிப்பு 8,20,000 பவுண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அங்கு திறமையாக செயல்பட்டு கஞ்சா வளர்ப்பதை கண்டுபிடித்த போலீசாருக்கு மூத்த அதிகாரிகள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.