கழிவறை என நினைத்து விமானத்தின் கதவைத் திறந்த விமானப் பயணி! - TamilSpark
TamilSpark Logo
உலகம்

கழிவறை என நினைத்து விமானத்தின் கதவைத் திறந்த விமானப் பயணி!


கழிவறை என நினைத்து பாகிஸ்தான் விமானத்தின் அவசரகாலக் கதவை பெண் ஒருவர் திறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் பயணி ஒருவர் கழி வறை என நினைத்து அவசர காலக் கதவைத் திறந்ததால் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகர் விமான நிலையத்திலிருந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்குக் கிளம்ப இருந்த விமானம் ஏழு மணி நேர தாமதத்துக்கு உள்ளானது.

இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு, விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் 40 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்படத் தயாராகி, ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது, பெண் பயணி ஒருவர், கழிவறை என நினைத்து, அவசரகால வழியை திடீரெனத் திறந்துள்ளார்.

flight க்கான பட முடிவு

இதனால் நெருக்கடி நிலையின்போது  விமானத் திலிருந்து வெளியேற பயன்படுத் தப்படும் சறுக்கு மிதவைகள் இயக்கப்பட்டன. இதைக் கண்ட விமானப் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சக பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து விமானி, விமானத்தை நிறுத்தினார். பின்னர் பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். சுமார் 7 மணி நேர தாமதத்துக்குப் பிறகு அந்த விமானம் மீண்டும் புறப்பட்டுச் சென்றது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானத்தின் தலைமை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo